பிக்பாஸ் நடிகையுடன் காதலில் மட்டைபந்து வீரர் ஹர்டிக் பாண்ட்யா

இந்திய மட்டைப்பந்து அணியின் ஆல்ரவுண்டர்களில் முக்கியமானவர் ஹர்டிக் பாண்ட்யா. இவர் ஒரு பிரபல நடிகையுடன் காதலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Elli AvrRam என்ற நடிகையை அவர் காதலித்து வருவதாகவும், இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாகவே சென்று வருவதாகவும், காதல் வானில் சிறகடித்து பறந்து வருகிறார் எனவும் கூறுகிறார்கள். தற்போது இந்திய அணி தென்னாபிரிக்காவில் விளையாடி வரும் நிலையில், பாண்ட்யாவை பார்ப்பதற்காக Elli AvrRam இந்தியாவில் இருந்து பறந்துள்ளார் நடிகை Elli AvrRam. அப்போது மற்ற கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் தற்போது வைரலாகியுள்ளது.

மிக்கி வைரஸ் என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ள Elli AvrRam, ஹிந்தி பிக்பாஸ் 7வது சீசனில் பங்கேற்றார் என்பது கூடுதல் தகவல். விரைவில் திருமண செய்தி வந்தாலும் ஆச்சரியப்படாதிங்க என்று கூறுகிறார்கள் பாலிவுட் ஊடக நண்பர்கள்.