மனுஷன்னா இப்டி இருக்கணும்ப்பா எனக்கு மட்டும் கூடுதல் பரிசுத் தொகையா பிசிசிஐ அலறவிட்ட டிராவிட்

யு-19 உலக கோப்பையை கைப்பற்றியதற்காக இந்திய அணியின் பயிற்சியாளரான தனக்கு மட்டும் அதிக பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளதற்கு ராகுல் டிராவிட் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். தன்னுடன் பயிற்சி அளித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் ஒரே மாதிரியான பரிசுத் தொகை வழங்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்து பிசிசிஐயை டிராவிட் அலறவிட்டுள்ளார்.அண்மையில் நடைபெற்ற யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அதே நேரத்தில் 4 முறை சாம்பியன் ஆன ஒரே அணி என்ற பெருமையும் இந்தியா பெற்றது.

யு-19 உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ள இந்திய அணிக்கு, பிசிசிஐ பரிசுத்தொகை அறிவித்துள்ளது. இதில், பயிற்சியாளர் ராகுல் திராவிட் ரூ.50 லட்சமும், அணி வீரர்கள் தலா ரூ.30 லட்சமும் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று  பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே, ஃபீல்டிங் பயிற்சியாளர் அபய் சர்மா உள்ளிட்ட அணியின் உதவிப் பணியாளர்களுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது

 

 

பிசிசிஐயின் இந்த அறிவிப்பபுக்கு பயிற்சியாளர் டிராவிட் கடும்  அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். பயிற்சியாளர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பரிசுத்தொகையை அளித்திருக்க வேண்டும் என்றும், , தனக்கு மட்டும் அதிகமாகப் பரிசுத்தொகை வழங்குவது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்ற பயிற்சியாளர்களும் அணியின் வெற்றிக்காகப் பாடுபட்டுள்ளார்கள். எனவே பயிற்சியாளர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியாகப் பரிசுத்தொகை வழங்கவேண்டும் என பிசிசிஐயிடம் ராகுல் டிராவிட் தனது அதிருப்தியையும் கோரிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

 

 

டிராவிட்டின் இந்த ஓபன் ஸ்டேட்மெண்டுக்கு கிரிக்கொட் வீரர்கள் பலத்த ஆதரவை அளித்துள்ளனர். தனக்கு மட்டும் கிடைத்தால் போதும் என்று நினைத்து வாழும் மனிதர்களிடையே அனைவரையும் சமமாக நினைக்கும் டிராவிட்டின் நல்ல மனசை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.