ஹர்பஜன் சிங்கோட நம்பர் ஒன் ஃபேன் நம்ம சின்னாளப்பட்டிக்காரராம்

சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் போட்ட டிவிட்டெல்லாம் சின்னாளப்பட்டியை சேர்ந்த அவரின் ரசிகருடையது என தெரியவந்துள்ளது. மேலும் திண்டுக்கல் சின்னாளப்பட்டியை சேர்ந்த அந்த ரசிகர்தான் தன்னுடைய நம்பர் ஒன் ரசிகர் என்று ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவர் இன்ஜினியரான இவர் தற்போது அபுதாபியில் பணிபுரிந்து வருகிறார்.

தீவிர கிரிக்கெட் ரசிகரான இவர் சமூக வலைதளங்கள் மக்களிடம் என்ட்ரி ஆன நேரத்தில் டிவிட்டரில் ஹர்பஜனை பின்தொடர்ந்துள்ளார்.

டிவிட்டரில் ஆதரவு 
பதிலடி கொடுத்த ரசிகர் .

ஹர்பஜனின் ஆட்டம் குறித்து விமர்சனங்கள் எழுந்தபோதும் ரசிகர்கள் அவரை விமர்சித்தப் போதும் டிவிட்டரில் அவருக்கு ஆதரவாக பதிலடி கொடுத்து வந்துள்ளார் சரவணன்.

 

மேலாளர் மூலம் தொடர்பு 
பிரமித்த பஜ்ஜி

இதனால் பிரமித்துப் போன ஹர்பஜன், தனது மேலாள விக்ரம்சிங்கின் தொலைபேசி எண்ணை சரவணனிடம் கொடுத்து அவரை தொடர்புகொள்ளுமாறு கூறியுள்ளார். பின்னர் தனது மேலாளர் மூலம் சரவணன் குறித்த மொத்த தகவலையும் அறிந்துள்ளார் ஹர்பஜன் சிங்.

திண்டுக்கல்லில் சந்திப்பு 
நேரில் சந்தித்த பஜ்ஜி

இதையடுத்து திண்டுக்கல்லில் நடைபெற்ற பஞ்சாப் தமிழக அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வரச்சொல்லி சரவணனை நேரடியாக சந்தித்துள்ளார் ஹர்பஜன் சிங்.

சரவணனுடன் போட்டோ 
தமிழில் பொங்கல் வாழ்த்து

அப்போது சரவணன் அவருடன் போட்டோ எடுக்க விருப்பியதாக ஹர்பஜன் சிங் சேர்ந்து போட்டோவும் எடுத்துள்ளார். இப்படியாக வளர்ந்துள்ளது இவர்களின் நட்பு.

இந்நிலையில் சரவணன் ஹர்பஜன் சிங்கிற்கு தமிழில் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார். அதைத்தான் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் ஹர்பஜன் சிங்.


லைக்குகளை அள்ளிய டிவிட் 
நம்பர் ஒன் ரசிகர்

ஹர்பஜன் சிங்கின் அந்த தமிழ் பொங்கல் வாழ்த்து டிவிட்டு வழக்கத்தை விட அதிகமான லைக்குகளை அள்ளியது. இதைத்தொடர்ந்து சரவணன்தான் தனது நம்பர் ஒன் ரசிகர் ஆதரவாளர் என தெரிவித்துள்ளார்.

ஹர்பஜனின் டிவிட் 
அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி

இதுதொடர்பாக கடந்த மாதம் 27 ஆம் தேதி பதிவிட்ட டிவிட்டில் உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்றும் சரவணன்தான் தன்னுடைய முதல் ரசிகர் மற்றும் ஆதரவாளர் என்றும் தெரிவித்துள்ளார்.


நன்றி தெரிவித்த சரவணன் 
திண்டுக்கல்லில் சந்தித்தேன்

2/3 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லில் அவரை சந்தித்ததாகவும் தெரிவித்த ஹர்பஜன் கடவுள் உங்களை ஆர்சிர்வதிக்கட்டும் டேக் கேர் என தெரிவித்துள்ளார். இதற்கு உணர்ச்சி பொங்க ஹர்பஜனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சரவணன்.