ஐபில் 2018 ஏலத்தில் அதிக பேஸ் பிரைஸ் கொண்ட வீரர்களின் பட்டியில் இது தான்

ஐபில் கொண்டாட்டம் எப்பொழுதுமே டிசம்பர், ஜனவரி மாதத்தில் கலை கட்ட துவங்கிவிடும். இம்முறை மீண்டும் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாடுவதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர் ரசிகர்கள்.

ஒவ்வொரு அணியும் தங்கள் எந்த வீரர்களை தக்க வைத்தோம் என்ற முடிவை வெளியிட்டனர். அடுத்தகட்டமாக வரும் ஜனவரி 27 , 28 ஆம் தேதிகளில் மற்ற வீரர்களுக்கான ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் மொத்தம் 1122  வீரர்கள் இடம் பெறுகின்றனர். அதில் 281  சர்வதேச போட்டியில் விளையாடியவர்கள்.

இந்த லிஸ்டில் பல வேர்களுக்கு அதீத கிராக்கி இருக்கும். வெளிநாட்டு வீரர்களில்  பென் ஸ்டோக்ஸ், மிட்செல் ஸ்டார்க், ரஷீத் கான், பிராவோ, பொல்லார்ட் , கெயில், ஸ்டோனிஸ், டீ கோக்   போன்றவர்களுக்கும் கடும் போட்டி நிலவும். இந்திய வீரர்களை பொறுத்தவரை அஸ்வின், ரஹானே, ராகுல், ஜாதவ், தவான், உத்தப்பா போன்றவர்களை பல அணிகள் தட்டிச்செல்ல முயற்சிப்பார்கள்.

எனினும் இந்த 2 கோடி விலை அளவில் ஹர்பஜன், கம்பிர், கேமரூன் வைட், ப்ளுங்கெட்ட, வில்லே போன்றவர்கள் நிலை என்னவாகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ipl

மேலும் இந்த ஏலத்தில் பல ஆச்சர்ய விஷயங்களை நாம் பார்க்க முடிகிறது. இஷாந்த் சர்மா தன் பேஸ் விலையாக 75 லட்சம் என்ற ரேஞ்சில் பதிவு செய்துள்ளார். மனிஷ் பாண்டே, சிராஜ் 1 கோடி. ( இதில் மனிஷ் பாண்டே கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற கருத்து நிலவுகிறது) தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் 1 . 5 கோடி. சென்ற ஆண்டு பூனே அணியின் கலக்கிய ராகுல் திரிபாதி 20 லட்சம், குஜராத் லயன்ஸ் பசில் தாம்பி 30 லட்சம், மும்பை இந்தியன்ஸ் அணியின் க்ருனால் பாண்டியா 40 லட்சம் என்ற ஆரம்ப விலையில் பதிவு செய்துள்ளது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது

இந்த ஏலத்தில் மிகவும் குறைந்த வயது வீரராக ஆசாமின் பேட்ஸ்மேன்  ரியான் பராக் (16), மூத்த  வீரராக மும்பையின் லெக் ஸ்பின்னர்  பிராவின் தாம்பே (46) இடம் பெறுகின்றனர் .

வெறும் சடலத்தை பாதுகாக்க மட்டும் தானா இவ்வளவு பெரிய கட்டிடம் மர்மத்தை விளக்கும்