அந்நிய மண்ணில் 21 குண்டுகள் முழங்க களமிறங்க போகும் இந்திய அணி

தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 5ம் தேதி நடைபெற்றது.

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இதனை தொடர்ந்து இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், நாளை செஞ்சுரியனில் துவங்கவுள்ளது.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி, சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்த நிலையில் தற்போது தென் ஆப்ரிக்காவுடன் கேப் டவுனில் நடந்த முதல் டெஸ்டில் மண்ணைக் கவ்வியதால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கடினமான வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்கு இந்திய அணி சரியான முறையில் தயாராகவில்லை என கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மிகவும் பலவீனமான இலங்கை அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி நாட்களை வீணடித்துவிட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்படாததுடன், ஒரே ஒரு பயிற்சி ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது இந்திய வீரர்களுக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது.

ரன் குவிப்புக்கு சாதகமான ஆசிய ஆடுகளங்களில் சாதிக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள், வேகத்துக்கு சாதகமான சூழ்நிலையில் சொதப்புவது ரசிகர்களையும் ஏமாற்றமடையச் செய்துள்ளது.

என்னதான் இந்தியா தென்னாப்பிரிக்க மண்ணில் சொதப்பினாலும் அவர்களுக்கு இந்திய அணி கொஞ்சம் ஸ்பெசல் தான்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் தொடக்கத்தின் போது, தென் ஆப்ரிக்க ராணுவம் சார்பில், இரு அணி வீரர்களுக்கு மரியாதை செலுத்த உள்ளனர்.

போட்டி துவங்குவதற்கு முன், தரை மற்றும் கப்பல் படையை சேர்ந்த 50 வீரர்கள், பாண்டு வாத்திய இசையுடன், பவுண்டரி எல்லையை சுற்றி அணி வகுத்து நிற்பர். இதன் பின், விமானத்தில் இருந்து பாராசூட் வீரர்கள் களத்தில் குதிக்கின்றனர்.

அடுத்து இரு அணிகளின் தேசிய கீதம் பாடப்படுகிறது. இதையடுத்து, 'ஜி-5' ரக துப்பாக்களில் இருந்து, 21 முறை குண்டுகள் முழங்கப்பட உள்ளது. கடைசியில் மீண்டும் பாண்டு வாத்தியம் இசை ஒலிக்க, ராணுவ வீரர்கள் மைதானத்தை விட்டு கிளம்புவர்.

உலகிலேயே முதல் முறையாக இப்படியொரு கௌரவம் கிடைப்பது இந்திய அணிக்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

15 நிமிடம் ராணுவத்தை நீக்குங்கள் 80% இந்துக்களை கொன்று குவிப்பேன் எச்.ராஜா