இந்திய அணிக்கு இப்படியொரு நிலை வரும் என்று கனவிலும் நினைத்து பார்த்திராத இரசிகர்கள்

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பரிதாபமாக தோல்வியை தழுவி உள்ளது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.

டாஸ்வென்று பேட்டிங் தேர்வு செய்த தென்னாப்பிரிக்க அணி 286 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 209 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 77 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸைத் தென்னாப்பிரிக்க அணி தொடங்கியது.

இரண்டாவது இன்னிங்ஸில் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்ததை தொடர்ந்து இந்திய அணிக்கு 208 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

208 ரன்கள் இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே திணறியது.

மோர்னே மோர்கல், பிலாண்டர், ரபாடா கூட்டணி இந்திய பேட்ஸ்மேன்களுக்குக் கடும் நெருக்கடி கொடுத்தது.

இந்தக் கூட்டணியின் வேகத்தை எதிர்கொள்ள முடியாத இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.

இறுதியில் 42.4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பிட்சை எடுத்து கேவலப்பட்டதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது ராஜினாமா செய்த எஸ்.வி.சேகர்