கட்டுணா கோஹ்லி மாதிரி ஆளை கட்டணும் அந்த போட்டோ வை பார்த்து ஏங்கும் இளம் பெண்கள்

மும்பை: ஒரு புகைப்படத்தை பார்த்து இளம் பெண்கள் கோஹ்லி மாதிரி கணவர் கிடைக்க மாட்டாரா என்று ஏங்குகிறார்கள்.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் கடந்த மாதம் 11ம் தேதி இத்தாலியில் ரகசியமாக திருமணம் நடந்தது.

அதை தொடர்ந்து டெல்லி, மும்பையில் இரண்டு முறை திருமண வரவேற்பு நடைபெற்றது.

கோஹ்லி 
அனுஷ்கா

புத்தாண்டை கொண்டாட மனைவி அனுஷ்காவை அழைத்துக் கொண்டு கோஹ்லி தென்னாப்பிரிக்காவுக்கு சென்றார். அங்கு எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார் கோஹ்லி.


காதல் 
திருமணம்

திருமணத்தை பற்றி யோசிக்கவே நேரம் இல்லை என்று நைசாக டிமிக்கி கொடுத்து வந்த அனுஷ்காவை தனது அதீத காதலை காட்டி சம்மதிக்க வைத்தவர் கோஹ்லி.

 

கிரிக்கெட் 
பயிற்சி

கிரிக்கெட் பயிற்சியின் போது கோஹ்லி தனது திருமண மோதிரத்தை கழற்றி வைக்காமல் கழுத்தில் இருக்கும் செயினில் கோர்த்துவிட்டுள்ளார். அனுஷ்காவை பிரிய மனமில்லாமல் கோஹ்லி இவ்வாறு செய்வதாக ரசிகைகள் பேசுகிறார்கள்.

ஸ்வீட் 
க்யூட்

கழுத்தில் திருமண மோதிரத்தை தொங்கவிட்டுள்ள கோஹ்லியை பார்த்து நமக்கு இப்படி ஒரு கணவர் கிடைக்க மாட்டாரா என்று ரசிகைகள் ஏக்கம் அடைந்துள்ளனர்.

ஜெயலலிதாவை ஆணிக் கட்டையால் தாக்கியது சசி குடும்பம்தான் பொன்னையன் பகீர்