ஊன்றுகோல் உதவியுடன் நடக்கும் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா

கால் மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா ஊன்றுகோல் உதவியுடன் நடக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உலக அளவில் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி எதிரணியின் பந்து வீச்சை துவம்சம் செய்வதில் வல்லவராக விளங்கியவர், இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா. இவர் இலங்கை அணிக்காக 110 டெஸ்ட், 445 ஒருநாள் போட்டிகள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 1996-ம் ஆண்டு இலங்கை அணி உலகக்கோப்பை வென்றதில் முக்கிய பங்காற்றியவர். பின்னர் 1999 முதல் 2003 வரை இலங்கை அணியின் கேப்டனாக இருந்தார். 2011-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற இவர், இலங்கை கிரிக்கெட் வாரியத்தில், கிரிக்கெட் வாரியத் தேர்வுக்குழுத் தலைவராக பதவி வகித்து வந்தார். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சச்சினுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடினார்.

இவ்வாறு கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு வியக்க வைக்கும் சாதனைகளை படைத்து வந்த 48 வயதான ஜெயசூர்யா, கால் மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மெல்போர்னில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வெடுத்து வருகிறார். மேலும் தனது ரசிகர்களுக்காக தான் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கனடா பள்ளிகளில் தமிழ் மொழி இரண்டாம் மொழியாக படிக்கலாம் தமிழுக்கு பெருமை