டோணி ஸ்மித் கோஹ்லி ஐபிஎல்லில் எந்த அணிக்கு எந்த வீரர் லிஸ்ட் ரெடி

டெல்லி: இந்த வருட ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் இன்னும் இரண்டு வாரங்களில் நடக்க இருக்கிறது. ஒவ்வொரு அணியும் 5 வீரர்கள் வரை மீண்டும் அணியில் சேர்த்துக் கொள்ள முடியும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.

தற்போது சென்னை அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மீண்டும் களத்திற்கு திரும்பி இருப்பதால் இப்போதே போட்டியில் சூடு கூடியிருக்கிறது. மேலும் எந்த வீரர்கள் எந்த அணிக்கு செல்வார்கள் என்பது எதிர்பார்ப்பபை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஏலம் எப்போதும் போல பெங்களூரில் நடக்கவுள்ளது. ஒவ்வொரு அணிக்குமான பட்ஜெட் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

புதிய நடைமுறை 
நடைமுறை .

ஐபிஎல்லில் சென்னையும் ராஜஸ்தானும் திரும்பி வந்து இருப்பதால் வீரர்கள் மீண்டும் அணிக்கு எடுத்துக் கொள்ளும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒரு அணி 5 வீரர்கள் வரை மீண்டும் அணிக்கு எடுத்துக்கொள்ள முடியும். இதன்முலம் 3 இந்திய அணி வீரர்களை அதிகபட்சமாக அணியில் எடுக்க முடியும். அதேபோல் 2 வெளிநாட்டு வீரர்களையும், 2 இந்திய அணியில் விளையாடாத வீரர்களையும் அதிகபட்சமாக அணியில் எடுக்க முடியும்.

 

பட்ஜெட் 
அணிகளின் பட்ஜெட்

அணிகளின் பட்ஜெட் 80 கோடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக வீரர்களுக்கு 15 கோடி வரை இந்த புதிய முறையில் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் அணியின் பட்ஜெட் இரண்டு கோடி ரூபாய் உயர்த்தப்படும். ஏலத்திற்கு முன்பே வீரர்களை தேர்வு செய்யும் முறைக்கு இன்று இறுதிக்குள் அணிகள் விருப்ப பட்டியலை கொடுக்க வேண்டும்.

சின்ன வீரர்கள் 
புதிய வீரர்கள்

எல்லா அணிகளும் இந்த விருப்ப பட்டியலை கொடுத்துவிட்டது. ரிஷாப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரை டெல்லி அணி கேட்டு இருக்கிறது. சுனில் நரேன், கிறிஸ் லைன் ஆகியோர் கொல்கத்தா அணியால் எடுக்கப்பட இருக்கிறார்கள். டேவிட் வார்னர், தீபக் ஹூடா ஆகியோர் சன் ரைசர்ஸ் அணியால் எடுக்கப்பட உள்ளனர்.

 

முக்கிய வீரர்கள் 
டோணி, கோஹ்லி

டோணி, ஜடேஜா, ரெய்னா மீண்டும் சென்னை அணிக்கும் செல்கிறார்கள். கோஹ்லி, சாஹல், டி வில்லியர்ஸ் பெங்களூர் அணிக்கு திரும்புகிறார்கள். ஸ்டிவ் ஸ்மித் ராஜஸ்தான் அணிக்கு திரும்புகிறார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மட்டும் எந்த வீரரையும் மீண்டும் அணிக்கு திரும்ப எடுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ரோஹித், பாண்டியா மும்பை அணிக்கு செல்கின்றனர்.

ரஜினிகாந்த்துக்கு திமுக ஆதரவா ஸ்டாலின் சொன்ன பதில் என்ன தெரியுமா