இந்த முறை ஐபிஎல் கோப்பை பெங்களூர் அணிக்குத்தானாம்

ஏப்ரல் மாதத்தில் ஐபிஎல் சீசன் துவங்க உள்ளது. இதற்கான புதிய வீரர்கள் மற்றும் ஏற்கனவே அணியில் இருந்த வீரர்கள் ஏலத்தில் விடப்பட உள்ளனர்.

இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த ஐபிஎல் தொடரில் மீண்டும் களமிறங்குகின்றன.

இந்த அணிகளுக்கு பதிலாக சேர்க்கப்பட்ட புனே மற்றும் குஜராத் அணிகள்  நீக்கப்பட்டுள்ளன.

இந்த முறை ஒரு அணி அதிகபட்சமாக 5 வீரர்களை மட்டுமே தக்கவைத்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத பெங்களூர் அணிக்கு இந்த முறை ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது.

இந்த முறை பெங்களூர் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூர்  அணியின் தோல்விக்கு அந்த அணியின் மோசமான பந்துவீச்சுதான்  காரணம் என்று கூறப்படுகிறது.

அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக., இந்திய அணியின் தலை சிறந்த பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதனுடன்., தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் கேரி கிரிஸ்டன் பெங்களூர் அணியின் பயிற்சியாளராக அமைந்துள்ளார்.

இதனால் இந்த முறை பெங்களூர் அணி கோப்பையை கண்டிப்பாக வெல்லும் என்று கிரிக்கெட் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்திற்கு இசையமைப்பது இவர்கள் தானா