இவர்கள்தான் எங்களுக்கு வேண்டும் அடம்பிடிக்கும் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் ஃபீவர் ஆரம்பம்

மும்பை: இந்த வருட ஐபிஎல் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் இப்போதே பலமாக தொடங்க ஆரம்பித்துவிட்டது. இந்த முறையும் ஏலம் பெங்களூரில் நடக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

எந்த வீரர்கள் எந்த அணிக்கு செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போதே அதிகம் ஆகிவிட்டது. சென்னை அணி மீண்டும் திரும்பி இருப்பதால் ரசிகர்கள் விசில் அடித்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் மும்பை அணி எந்த வீரர்களை அணியில் தக்க வைக்கும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. முக்கியமாக ரோஹித் சர்மா கண்டிப்பாக அணியில் இருப்பார் என்று கூறப்பட்டு உள்ளது.

11வது சீசன் ஐபிஎல் 
ஐபிஎல் 11வது சீசன் .

எப்போதும் போல் இல்லாமல் ஐபிஎல் 11 வது சீசன் பல ஆச்சர்யமான விஷயங்களை கொண்டு இருக்கிறது. இதில் மிக முக்கியமானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஐபிஎல்லுக்கு திரும்பி இருப்பது. அதேபோல் ராஜஸ்தான் அணியும் மீண்டும் ஐபிஎல் போட்டிகளுக்கு திரும்பி இருக்கிறது.

ஏலம் ஆரம்பம் 
ஏலம் எப்போது

இதற்கான ஏலம் ஜனவரி மாதம் 27 மற்றும் 28 தேதிகளில் நடக்க உள்ளது. பல முக்கியமான வீரர்கள் மீண்டும் இந்த முறை ஏலத்திற்கு வர இருப்பதால் இந்த நிகழ்வு இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எப்போதும் போல் இந்த முறையும் ஏலம் பெங்களூரில் நடக்கும். ஒவ்வொரு அணிக்குமான பட்ஜெட் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. முன்பு 66 கோடியாக இருந்த பட்ஜெட் தற்போது 80 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

லிஸ்ட் கொடுக்க வேண்டும் 
யாரை தக்க வைக்கிறார்கள்

இந்த ஐபிஎல் போட்டியில் எந்த வீரர்களை அணிகள் தக்க வைக்க விரும்புகிறதோ அந்த வீரர்களின் பட்டியலை இப்போதே கொடுக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் குறிப்பிட்டு இருக்கிறது. இதற்கு ஜனவரி 4ம் தேதி கடைசி நாள் என்று கூறப்பட்டு இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த பட்டியலை கொடுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மும்பை விவரம் 
மும்பைக்கு யார்

சென்னை அணியின் முக்கிய வைரியான மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை தக்க வைக்க முடிவு செய்து இருக்கிறது. மேலும் ஹர்திக் பாண்டியா மற்றும் குருனால் பாண்டியாவும் அணியில் தக்கவைக்கப்பட இருக்கிறார்கள். ரோஹித் சர்மா , கோஹ்லி, டோணி என மும்முனை போட்டியால் இந்த ஐபிஎல் கலகலக்க இருக்கிறது

அம்பலமான உண்மை சசிகலா மவுனவிரதத்தின் பின்னணி இது தானாம்