கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை. மன்னிப்பு கேட்டு அழுகை

டாக்கா: வங்கதேசத்தை சேர்ந்த சபீர் ரஹ்மான் என்ற வீரருக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து 6 மாதம் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வருடம் மே மாதம் வரை அவர் எந்த வங்கதேச போட்டிகளிலும் விளையாட முடியாது.

மேலும் அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த 6 மாதத்திற்குள் அவர் 1 கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் குறிப்பிட்டு இருக்கிறது.

இத்தனை தண்டனைகளுக்கு பின்பும் ஒரு சிறிய காரணம் மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றங்களுக்கு மேல் குற்றம் 
குற்றம்

வங்கதேச அணியில் இருக்கும் முக்கியமான ஆல் ரவுண்டர்களில் சபீர் ரஹ்மானும் ஒருவர். நேற்று வரை இவர் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் 'பி' கிரேட் ஒப்பந்தம் செய்து விளையாடிக் கொண்டு இருந்தார். மிக முக்கியமான வீரர்களுக்கு அடுத்த நிலை வீரர்களுக்கு இந்த ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். இவர் அதேபோல் அவரது சொந்த ஊரான 'ராஜ்சேஹி' தேசிய அணிக்காகவும் விளையாடி இருக்கிறார்.

 

தண்டனை 
மன்னிப்பு

ஏற்கனவே இவர் ஒரு முறை களத்தில் இருக்கும் போது நடுவரிடம் சண்டை போட்டதாக குற்றச்சாட்டப்பட்டார். ஆனால் அப்போது மன்னித்து விடப்பட்டார். அதற்கு பின் மீண்டும் ஐசிசி போட்டி ஒன்றில் மீண்டும் நடுவரிடம் சண்டை போட்டு இருக்கிறார். ஆனால் அப்போதும் அவருக்கு சிறிய அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது.

மீண்டும் செய்தார் 
மீண்டும்

இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த தேசிய போட்டி ஒன்றில் மீண்டும் இதே தவறை அவர் செய்து இருக்கிறார். ஆனால் இந்த முறை அவர் நடுவரிடம் மட்டும் தவறாக நடந்து கொள்ளாமல் அங்கு இருந்து ரசிகர் ஒருவரிடமும் சண்டையிட்டு இருக்கிறார். மேலும் களத்தில் நடுவரை மோசமாக திட்டி இருக்கிறார்.


தடை 
விளையாட தடை

இவரின் இந்த செயலை பார்த்த வங்கதேச கிரிக்கெட் வாரியம் அணியில் இருந்து அவரை நீக்கி இருக்கிறது. மேலும் 6 மாதம் கிரிக்கெட் விளையாட தடை விதித்து உள்ளது. அதேபோல் 1.5 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. இந்த அபராத தொகையை தண்டனை காலம் முடிவடைவதற்குள் கட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. சபீர் அதே இடத்தில் மன்னிப்பு கேட்டு அழுத சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவது பற்றி திடுக் தகவலை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்