டோணி, ரெய்னா, மெக்கல்லம்.. விட்ட இடத்தில் இருந்தே விஸ்வரூபம்.. இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை: டோணி, ரெய்னா, மெக்கல்லம் போன்ற அதிரடி நாயகர்களுடன் மீண்டும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் காலடி எடுத்து வைக்க உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முறைகேடு புகார் காரணமாக 2 வருடங்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தவைதான், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்.

தண்டனை காலம் முடிவடைந்த நிலையில், 2018 ஐபிஎல் சீசனுக்கு இவ்விரு அணிகளும் களமிறங்க உள்ளன.

விடை கிடைத்தது 
ரசிகர்கள் குழப்பம்

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு பதிலாக உருவாக்கப்பட்ட புனே மற்றும் குஜராத் அணிகள் கலைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், டோணி மீண்டும் சிஎஸ்கே அணிக்கே திரும்புவாரா என்ற கேள்வி சென்னை ரசிகர்கள் மனதில் தீயாய் கனன்று வந்தது. வீரர்களை தேர்ந்தெடுக்க நடைபெறும் ஏலத்தின்போது, டோணியை வேறு அணி எடுக்க வாய்ப்புள்ளதே என்ற கேள்வி ரசிகர்களை துரத்தியது.

 

பெரிய விசில் அடிங்க 
சென்னையின் டோணி

ரசிகர்களால், டோணி சென்னையின் மகனாக பார்க்கப்படுவதே இதற்கு காரணம். தமிழக ரசிகர்கள் மட்டுமல்ல, இந்தியா முழுக்க உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் டோணியை சென்னை அணியின் செல்ல பிள்ளையாகத்தான் பார்க்கிறார்களே தவிர ராஞ்சி வீரராக கிடையாது. இந்த நிலையில்தான் சென்னை ரசிகர்கள் வயிற்றில் பால் வார்த்துள்ளது ஐபிஎல் நிர்வாக கவுன்சில்.

 

யார், யார் வீரர்கள்? 
சென்னைக்கு டோணி

ஐபிஎல் நிர்வாக கவுன்சில் அறிவிப்புபடி, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் 2 வருடங்கள் முன்பாக தங்கள் அணிக்காக ஆடியதில் அதிகபட்சமாக 5 வீரர்களை ஏலம் இன்றியே தக்க வைத்துக்கொள்ள முடியும். இதன்படி டோணியை சிஎஸ்கே தக்க வைக்கும் என்பது சிறு குழந்தைக்கும் தெரிந்த விஷயம். டோணி தவிர, ரெய்னா, மெக்கல்லம், பிராவோ, ஜடேஜா ஆகியோரையும் சிஎஸ்கே தக்க வைக்கும் என தெரிகிறது.

 

அணிகள் விவரம் 
எந்த அணிக்கு யார், யார்?

ராஜஸ்தான் அணி, ரஹானே, ஆஸி.வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஃபாக்னர் ஆகியோரை தக்க வைக்க முடியும். ஆனால் இங்கிலாந்து வேகப்பந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஏலத்திற்கு அனுப்பப்படுவார். டோணி சிஎஸ்கே அணிக்குத்தான் என்பது உறுதியாகியுள்ளதால், சிங்கம் களமிறங்கிடுச்சே என ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களை தெறிக்கவிட்டுக்கொண்டுள்ளனர். #IPL2018 என்பது டிவிட்டரில் டிரெண்டாகிக்கொண்டுள்ளது.

 

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் : கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை பிரமுகர்......அதிரவைக்கும் பின்னணி!