3 வயது சிறுமியின் வாயில் வெடி வைத்த சிறுவர்கள்.. உயிருக்கு போராடும் பிஞ்சு.. வினையான விளையாட்டு!

லக்னோ: உத்தர பிரதேசத்தில் தீபாவளி அன்று மாலை மூன்று வயது சிறுமியின் வாயில் சிறுவர்கள் பட்டாசு வைத்து வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் நேற்றுதான் தீபாவளி கொண்டாடப்பட்டது.

நேற்று மாலை இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. சஷி குமார் என்ற நபரின் மூன்று வயது சிறுமியின் வாயில் சில நபர்கள் வெடியை வைத்து வெடித்து இருக்கிறார்கள்.

வாயில் 
வாயில் தையல்

நான்கைந்து வெடிகளை ஒன்றாக வைத்து வெடித்து இருக்கிறார்கள். இதனால் அந்த சிறுமியின் வாய் மொத்தமாக கிழிந்து இருக்கிறது. அந்த சிறுமியின் தொண்டை வரை இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்த சிறுமிக்கு வாயில் மட்டும் 50 தையல்கள் போட்டு இருக்கிறார்கள்.

 

மோசம் 
மோசமான உடல்நிலை

அவளின் உடல் நிலை தொடந்து மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். சிகிச்சைகள் பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கிறார்கள். நாக்கு மொத்தமாக இதனால் வெட்டப்பட்டு இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

 

ஓடிவிட்டான் 
ஓடினான்

இந்த சிறுமியின் வாயில் வெடி வைத்த சிறுவர்கள் அங்கிருந்து எஸ்கேப் ஆகி விட்டனர். அங்கிருந்த மக்கள் அவர்களை பிடிக்க முயற்சி செய்த போது, அவர்களை தள்ளிவிட்டுவிட்டு ஓடி இருக்கிறார்கள். இந்த காரியத்தை அவர்கள் திட்டமிட்டு செய்திருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

 

தேடுதல் 
தேடுதல் வேட்டை

தற்போது போலீஸ் இவர்களை தேடி வருகிறது. இவர்கள் அதே ஊர் பகுதியை சேர்ந்தவர்கள்தான். அந்த சிறுவர்களின் பெற்றோரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.