லாலு குடும்பத்திற்கு ஒரு ஷாக்.. திருமணமான 6 மாதத்திலேயே டைவர்ஸ் கேட்கும் மகன்!

திருமணமான 6 மாதத்தில் விவாகத்து கேட்கிறார் லாலு மகன்

பாட்னா: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் விவாகரத்து கோரியுள்ளார். அவருக்கு 6 மாதத்திற்கு முன்புதான் மிகப் பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது மனைவி ஐஸ்வர்யா ராயிடமிருந்து விவாகரத்து கேட்டு பாட்னா கோர்ட்டில் தேஜ் பிரதாப் யாதவ் மனு செய்துள்ளார். இந்தத் தகவல் ஐஸ்வர்யா குடும்பத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. தகவல் கிடைத்ததும் ஐஸ்வர்யாவின் பெற்றோர், ஐஸ்வர்யா ஆகியோர் தேஜ் பிரதாப்பின் தாயார் ராப்ரி தேவியை சந்தித்துப் பேசியுள்ளனர்.

விவாகரத்து கேட்கிறார்

மேலும் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். தனது மகனை சிறைக்கு அழைத்து அவரும் பேசியுள்ளார். இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளில் குடும்பத்தினரும், உறவினர்களும் இறங்கியுள்ளனர். என்ன காரணத்திற்காக தேஜ் பிரதாப் விவாகரத்து கோருகிறார் என்று தெரியவில்லை.

மனத்தாங்கல்

ஆனால் கணவன் மனைவிக்கு இடையே சில காலமாகவே உறவு சரியில்லை. இருவருக்கும் இடையே மனத்தாங்கல் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் தேஜ் பிரதாப் விவாகரத்து கேட்பதாக அவரது வக்கீல் யஷ்வந்த் குமார் சர்மா கூறியுள்ளார்.

பரோலில் லாலு

கிட்டத்தட்ட 10,000 பேருக்கு மத்தியில் கடந்த மே 12ம் தேதி மிகப் பிரமாண்டமான முறையில் தேஜ், ஐஸ்வர்யா திருமணம் நடந்தது. பீகார் ஆளுநர், மத்திய அமைசச்ர்கள், ஏராளமான முக்கியப் பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர். 3 நாள் பரோலில் வெளி வந்து திருமணத்தில் கலந்து கொண்டார் லாலு பிரசாத் யாதவ்.

எம்பிஏ படித்தவர்

ஐஸ்வர்யா ராய் ராஷ்டிரிய ஜனதாதள எம்எல்ஏ சந்திரிகா ராயின் மகள் ஆவார். நோய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்தவர்.

குடும்பத்தில் பூசல்?

லாலுவின் 2வது மகன் தேஜஸ்வி யாதவ். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்தான் கட்சியின் தலைவராக உள்ளார். தனது தம்பிக்கு லாலு பிரசாத் யாதவ் முக்கியத்துவம் கொடுப்பதால் தேஜ் பிரதாப் யாதவ் கோபத்தில் இருப்பதாகவும் ஒரு பூசல் உள்ளது நினைவிருக்கலாம்.