தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாடுகளின் பட்டியல் வெளியீடு.. உலக நாடுகளுக்கு ஷாக் கொடுத்த இந்தியா!

டெல்லி: உலகில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா 77 வது இடத்தை பிடித்து இருக்கிறது.

உலகில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலை உலக வங்கி வெளியிட்டு இருக்கிறது. மொத்தம் 190 நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு இந்த லிஸ்ட் மூலம் நல்ல செய்தி ஒன்று கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியா பெரிய முன்னேற்றத்தை சந்தித்து இருக்கிறது.

[என்னது.. ரூ.3000 கோடி சர்தார் பட்டேல் சிலைக்குள் பாகிஸ்தானை 10 நொடிகளில் அழிக்கும் ராக்கெட் உள்ளதா? ]

என்ன 
என்ன இடம்

மொத்தம் 190 நாடுகளில் இந்தியா தற்போது 77 வது இடத்தை பிடித்து இருக்கிறது.மொத்தம் 23 இடங்கள் இந்தியா முன்னேறி உள்ளது. 2017ல் இந்தியா 100 வது இடத்தில் இருந்தது.

 

வரலாறு 
என்ன வரலாறு

எல்லா வருடமும் இந்தியா இதில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. கடந்த 2016ம் வருடம் 153 வது இடத்தில் இருந்தது. அதற்கு முந்தைய வருடம் 165 வது இடத்தில் இருந்தது. இப்படி வரிசையாக இந்தியா உலகில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் முன்னேற்றம் கண்டு வருகிறது.

 

எப்படி 
எப்படி தேர்வு

உலக வங்கி பல அடிப்படை விஷயங்களை வைத்து இதை தீர்மானிக்கிறது. ஒரு தொழில் தொடங்க எப்படி சூழல் உள்ளது, இதற்கு முன் தொடங்கியவர்கள் எப்படி இருக்கிறார்கள், கட்டுமான துறை எப்படி உள்ளது, மின்சார வசதி, கடன் வசதி, வரி எப்படி வாங்குகிறார்கள், எல்லை தாண்டிய வர்த்தக அனுமதி எப்படி உள்ளது, ஒப்பந்தம் எப்படி நடக்கிறது என்று பல விஷயங்களை மையமாக வைத்து நாடுகளை தரம்பிரிக்கிறது உலக வங்கி.

 

வேறு 
வேறு நாடுகள்

இந்த பட்டியலில் நியூசிலாந்து முதல் இடத்தில் உள்ளது. சிங்கப்பூர் இரண்டாம் இடத்தில் உள்ளது. டென்மார்க், ஹாங்காங் ஆகியவை அடுத்தடுத்த இடத்தில் உள்ளது. அமெரிக்கா 8 வது இடத்தில் உள்ளது. சீனா 46 வது இடத்தில் உள்ளது, பாகிஸ்தான் 136வது இடத்தில் உள்ளது.