நான் கால் பாய், ஒரு நைட்டுக்கு ரூ. 8,000/-, வம்படியாக வந்து சிக்கிய ஆண் விபச்சாரி!

இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஜிக்லோ (Giglo) எனப்படும் ஆண் விபச்சார தொழில் ஏற்கனவே செக்கைப் போடு, போட்டுக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் இந்த ஆண் விபச்சாரத்தில் படித்த இளைஞர்கள் தான் வேலை செய்கிறார்கள் என்றும். இதில், இவர்கள் நிறைய பணம் பார்த்து வருவதாகும் செய்திகள் கடந்த ஓரிரு ஆண்டுகளாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.

ஒருபுறம் இதில் பெரிய இடத்து பெண்கள் இருக்கிறார்கள் என்றும் .மறுபுறம் ஆசைக்காட்டி ஆண்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்ற தகவல்களும் கிடைத்து வருகிறது.லிங்கிடு இன் போன்ற வேலை தேடும் சமூக தளங்களில் இவ்வகையிலான கிகாலோக்கள் உலாவி வருகிறதாகவும் அறியப்படுகிறது.

இன்று (31/10/2018), ஃபேஸ்புக்கில் சென்னையை சேர்ந்த சிநேகா மோகன்தாஸ் என்ற இளம்பெண், தான் எதிர்கொண்ட ஜிக்லோவின் முகத்திரையை கிழித்து போலீஸில் தைரியமாக பிடித்துக் கொடுத்திருக்கிறார்.

மேலும், இப்படியான ஆண்கள் குறித்து பெண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த ஆண் விபச்சாரி தன்னிடம் பேசிய சாட் ஹிஸ்டரியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்தும் பகிர்ந்திருக்கிறார்....

ஹாய்!

சீனிவாசன் டிஸ்கவர் என்ற டிப்ளே இமேஜ் இல்லாத போலி முகவரியில் இருந்து சிநேகா மோகன்தாஸ்க்கு ஹாய், சிநேகா, நான் ஒரு கால் பாய். விருப்பமிருந்தால் மெசேஜ் செய்யவும் என்று சாட்டினை துவக்கி இருக்கிறார் அந்த ஜிக்லோ.

கால் பாயா? அப்படினா என்ன அர்த்தம்? உன்ன எங்க கால் பண்ண? என்று பதில் அளித்துள்ளார். அதற்கு அந்த ஜிக்லோ, நான் சென்னையில் இருக்கிறேன். உங்களுக்கு செக்ஸ் சர்வீஸ் வேண்டும் என்றால், எனக்கு கால் அல்லது மெசேஜ் செய்யவும் என்று கூறி இருக்கிறார்.

 

ப்ளீஸ்!

அதற்கு சிநேகா எந்த பதிலும் அளிக்காமல் தவிர்க்க, தொடர்ந்து ஹாய் மேம், ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க.. மதிய வணக்கம் என்று தொடர்ந்து மெசேஜ் செய்துக் கொண்டே இருந்திருக்கிறார் அந்த ஜிக்லோ.

ஒரு கட்டத்தில் இவனை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று கருதிய சிநேகா. உன் படம் மற்றும் நம்பரை அனுப்பு என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஜிக்லோ, உங்க பிளேஸ் எது என்று கேட்டிருக்கிறார். முதலில் உன்னோட போட்டோ, நம்பர் அனுப்பு. உன்னோட உண்மையான பெயர் என்ன என்று பேச்சை தொடர்ந்திருக்கிறார் சிநேகா.

 

வாசு!

சிநேகா எதற்கு பேச்சுக் கொடுக்கிறார் என்று அறியாத ஜிக்லோ. தனது உண்மையான படத்தை அனுப்பி. தன் பெயர் வாசு என்றும் தெரிவித்திருக்கிறார். பிறகு சிநேகா நம்பர் கேட்க, தன் அலைப்பேசி என்னை சாட்டில் பகிர்ந்திருக்கிறார்.

வாசு தன் நம்பரை பகிர்ந்த உடன் போலீஸில் கூறி ட்ராக் செய்ய கூறியது மட்டுமின்றி. வாசுவை ட்ராக் செய்யும் வரை தொடர்ந்து பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்திருக்கிறார் சிநேகா.

 

ஒரிஜினல் போட்டோ?

ஏன் ஒரிஜினல் போட்டோ வைக்கல என்று சிநேகா கேட்டதற்கு செல்லமாக, சும்மா என்று கூறி இருக்கிறார் வாசு. நீ எங்க இருக்க என்றதற்கு கூலாக சென்னை என்று கூறி இருக்கிறார் வாசு.

சிநேகா தன்னை பிடித்து போய் பேசுகிறார் என்று கருதிய வாசு, நீங்க எங்க இருக்கீங்க என்று கேட்க, சினேகாவோ, உனக்கு பசங்க, சகோதரி, சகோதரர்கள் இருக்காங்களா? என்று கேட்டிருக்கிறார்.

 

சிங்கிள்!

எனக்கு ஃபேமிலி இல்ல. நான் ஒன் மேன் ஆர்மி என்று கெத்தாக பதில் அளித்திருக்கிறார் ஜிக்லோ வாசு. நீ எத்தன வருஷமா இந்த சர்வீஸ்ல இருக்க என்று சிநேகா கேட்டதற்கு, ஒன்பது வருடங்களாக இந்த சர்வீஸ் செய்து வருவதாக தெரிவித்திருக்கிறார் வாசு. ஆக, 19 வயசுல இருந்து இந்த சர்வீஸ்ல தான் இருக்கியா என்று கேட்கா... பெருமிதமாக எஸ்ஸ்ஸ்... என்று கூறி இருக்கிறார் வாசு.

 

அப்ரோச்!

பொண்ணுக கிட்ட எப்படி அப்ரோச் பண்ற... இதுக்கு எவளோ சார்ச்ஜ் பண்ற என்று கேட்க... ஃபேஸ்புக் மூலமாக தான் பெண்களை பிடிக்கிறேன். மூன்று மணி நேரத்திற்கு 2,500, ஒரு இரவுக்கு 8,000, ஒரு நாள் முழுக்க 15,000 என்று காஸ்ட்லி ரேட் கூறி இருக்கிறார் வாசு.

நீ ஒன்னும் அவ்வளோ வர்த் இல்ல என்று சிநேகா பதில் அளிக்க, ஓ! என்று வாயை பிளந்திருக்கிறார் வாசு.

 

கேட்டு சொல்கிறேன்...

வெயிட் பண்ணுப்பா.. என் ஃபிரெண்ட் கிட்ட பேசிட்டு சொல்றேன் என்றதும்.. கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா என்பது போல.. ஓகே, ஒகே வெயிட்டிங் என்று பஞ்ச டயலாக் எல்லாம் அடித்திருக்கிறார் வாசு. உங்க ஃபிரெண்ட் பேரு என்ன என்று கேட்டதும், சிநேகா லாவண்யா ஐ.பி.எஸ். என்று பதில் கூறி இருக்கிறார்.

 

போலீசா!?

என்ன மேடம் போலீஸ் எல்லாம் உள்ள இழுக்கிறீங்க.. போலீஸ்ல மாட்டிவிட்றாதீங்க.. உங்களுக்கு வேணாம்னா விட்டுடுங்க.. பை.. என்று கூறி எஸ்கேப் ஆகப் பார்த்திருக்கிறார் வாசு.

ஏன்பா பயப்படுற... அவங்க உனக்கு நல்ல கம்பெனி கொடுப்பாங்க என்று சிநேகா நக்கலாக கூற.. இல்ல வேணாம் மன்னிச்சிடுங்க என்று ஆல் எஸ்கேப் ஆகி இருக்கிறார்.

 

எஸ்.பி உதவி!

எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி பேசுவ, ஆல்ரெடி உண்ண ட்ராக் பண்ணிட்டு இருக்கோம். உன்ன மாதிரி ஆளுங்க தான் பொண்ணுக வாழ்க்கைய ஸ்பாயில் பண்றீங்க என்று கோபத்தில் குமுறி இருக்கிறார் சிநேகா.

சிநேகாவிற்கு எஸ்.பி. ட்ராக் செய்ய உதவியதற்கு நன்றி தெரிவித்தும். வாசுவிற்கு தகுந்த தண்டனை வாங்கி தருமாறு கூறியும். இந்த ஸ்க்ரீன் ஷாட்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறார் சிநேகா.