பெண்ணாக மாறி இளைஞர் செய்த செயல்: காதலுக்காக இப்படியுமா? வியக்க வைக்கும் சம்பவம்!

காதலுக்கு ஜாதி, மதம், வயது, தகுதி என எதையும் பார்த்து வராது என்பது அனைவரும் அறிந்ததே. இதற்காகவே காதலுக்கு கண்கள் இல்லை எனவும் பலர் கூறுவர். இதை நிரூபிக்கும் வகையில் இந்தியாவில் பல நிகழ்வுகள் நடந்திருந்தாலும், மேற்கு வங்கத்தில் நிகழ்ந்திருக்கும் சம்பவம் பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காதலுக்காக இவ்வாறும் செய்வார்களா என கேள்வியும் எழுப்பியுள்ளது.

மேற்கு வங்கம் மாநிலம், மோய்னகுடி பகுதியைச் சேர்ந்தவர் சக்னிக் சக்ரபோர்தி. இவரும் சவுத் தினஜ்பூர் பகுதியைச் சேர்ந்த அனிக் தத்தா என்பவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் நடந்த மாடலிங் போட்டியில் கலந்துக்கொள்ளும்போது அறிமுகமாகினர். பின்பு இருவரும் இணை பிரியாத நண்பர்களாக மாறினர்.ஆண்களான இருவரும் தங்களையே அறியாமல் அதிகளவு அன்பை பரிமாறிக்கொண்டு காதலித்து வந்தனர். ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர். இதற்கு இருவரது குடும்பத்தினரும் ஆரம்பத்தில் அதிர்ச்சியுற்றாலும் பின்னர், சமூதாயத்தைப் பற்றி கவலைப்படாமல் காதலுக்கு பச்சைக் கொடி காட்டினர்.

ஆனால், இருவரும் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது உறவை யாரும் எந்தவிதத்திலும் கொச்சைப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக, தனது பாலினத்தை மாற்றிக்கொள்ள முடிவு செய்தார் அனிக். அதன்படி, ஆணாக இருந்த அனிக், அறுவை சிகிச்சையின் மூலம் பெண்ணாக மாறினார்.பின்பு இருவீட்டார் சம்மதத்துடன் அனிக் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சக்னிக்கை திருமணமும் செய்து கொண்டார். காதலுக்காக பாலினத்தை மாற்றி திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அனிக் மற்றும் சக்னிக் கூறுகையில், தாங்கள் புதுவித குடும்ப வாழ்க்கைத் தொடங்க இருக்கிறோம். அனைவரின் ஆசீர்வாதத்தையும் எதிர்ப்பார்க்கிறோம், என்றனர்.