இரண்டு நாட்டிலும் ஒன்றுதான்.. இலங்கை சந்திக்கும் அதே பிரச்சனைதான் இந்தியாவிலும்.. என்ன தெரியுமா?

இலங்கையில் நிகழும் அரசியல் பிரச்சனைகளுக்கு அந்நாட்டின் பொருளாதார சீர்கேடு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

கொழும்பு: இலங்கையில் நிகழும் அரசியல் பிரச்சனைகளுக்கு அந்நாட்டின் பொருளாதார சீர்கேடு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அந்நாட்டில் இந்த வருட தொடக்கத்தில் எப்படி பொருளாதாரம் மோசம் அடைய தொடங்கியதோ அதேபோல்தான் இந்தியாவின் பொருளாதாரமும் தற்போது உள்ளது.

இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது அங்கு நிறைய அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பின் நிறைய காரணங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது வெறும் அதிபரின் முடிவு என்று ஒதுக்கி தள்ளிவிட முடியாது. இதற்கு பின் பல பொருளாதார காரணமும் உள்ளது.

இலங்கையில் இந்தியாவுடன் போட்டியிடவில்லையாம்.. சீன நாளிதழ் வெளியிட்ட செய்தி

காரணங்கள் என்ன

இலங்கையில் நிலவும் அரசியல் பிரச்சனைகளுக்கு அந்நாட்டு பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவின் மிக மோசமான பொருளாதார கொள்கையும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. அந்நாட்டின் பொருளாதாரம் கடந்த ஒரு வருடத்தில் மிக மோசமான பாதிப்பை சந்தித்து இருக்கிறது. தொடர்ந்து அந்நாட்டு பொருளாதாரம் சரிவை நோக்கியே சென்றுள்ளது.

இலங்கை ரூபாய்

இலங்கை நாட்டின் ஸ்ரீலங்கன் ரூபீஸ் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. 1 டாலருக்கு நிகரான ஸ்ரீலங்கன் ரூபீஸ் மதிப்பு 176 என்றால் நம்ப முடிகிறதா?. இந்திய ரூபாய் மதிப்பை விட ஸ்ரீலங்கன் ரூபீஸ் மதிப்பு மோசமாக உள்ளது. 1 இந்திய ரூபாய்க்கு நிகரான ஸ்ரீலங்கன் ரூபீஸ் மதிப்பு 2.36 ஆக உள்ளது.

பெட்ரோல் டீசல் விலை

அதேபோல் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலையேற்றமும் அங்கு மக்கள் அரசு மீது கோபம் கொள்ள ஒரு காரணமாக அமைந்தது. அங்கு பெட்ரோல் விலை கடந்த மே மாதம் 100 ஸ்ரீலங்கன் ரூபீஸ் வரை உயர்த்தப்பட்டது. இப்போது அங்கு பெட்ரோல், டீசல் விலை 160 ஸ்ரீலங்கன் ரூபீஸுக்கும் அதிகமாக விற்கிறது. மக்கள் கோபத்திற்கு இது பெரிய காரணம்.

இந்தியாவில் என்ன

இந்தியாவிலும் தற்போது இதே போன்ற பொருளாதார பிரச்சனைதான் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மட்டுமே இந்தியா ரூபாய் மதிப்பு நிலையாக உள்ளது. ஆனால் இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து மோசமாக வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிகழ்ந்தது போலவே மோசமான ரூபாய் வீழ்ச்சி நடக்கலாம். அதற்கு ஏற்றபடி ஆர்பிஐக்கும், மத்திய அரசுக்கும் மோதல் உருவாகி உள்ளது.

விலைவாசி

விலைவாசியும் அதேபோல்தான் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல் டீசல் விலை கடந்த ஒருவாரமாக குறைகிறது. ஆனால் இது ஐந்து மாநில தேர்தலுக்காக குறைக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.இந்திய வரலாற்றில் இந்த வருடம்தான் அதிக விலையில் பெட்ரோல் டீசல் விற்றது குறிப்பிடத்தக்கது.

வேலை வாய்ப்பு

அதேபோல் இலங்கையில் வேலை வாய்ப்பு மிகவும் மோசமான நிலையை அடைந்து இருக்கிறது. பலருக்கு வேலை தருவதாக கூறிவிட்டு பிரதமர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சிகள் எல்லோரும் அந்த குற்றச்சாட்டை வைக்கிறார்கள். இப்படி இரண்டு நாட்டு பிரச்சனைகளுக்கும் நிறைய தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.