ஃபுல் போதை.. ஆடைகளை கழற்றி போலீசாருடன் ரகளை செய்த மும்பை அழகி

ஆடைகளை களைந்து வாக்குவாதத்தில் பெண் ஒருவர் ஈடுபட்டார்.

மும்பை: ஆண்கள் தண்ணி அடித்தால் போதை மண்டைக்கேறி பலாத்காரம், கொலை வரை செல்லும் என்பது நமக்கு தெரியும். ஆனால் ஒரு பெண் அளவுக்கு அதிகமாக சரக்கு அடித்து. அதனால் போதையும் தலைக்கேறியதால் என்ன செய்தார் தெரியுமா? படியுங்கள்.

டேராடூனை சேர்ந்த இளம் பெண் இவர். ஒரு மாடல் அழகியாக இருப்பவர். மும்பையில் ஒரு அப்பார்ட்மெண்ட்டில் குடியிருக்கிறார். மிகப்பெரிய அப்பார்ட்மெண்ட் என்பதால் எப்போதுமே செக்யூரிட்டிகள் இங்கு டியூட்டியில் இருப்பார்கள். தினமும் மது அருந்தும் பழக்கம் உடைய இந்த அழகி, சம்பவத்தன்று இரவு கொஞ்சம் அதிகமாகவே அடித்துவிட்டார்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கைதான அர்ஜுன ரணதுங்காவுக்கு ஜாமீன்.. நீதிமன்றம் அதிரடி

போக முடியாது மேடம்

இன்டர்காமில் செக்யூரிட்டிக்கு ஒரு போனை போட்டார். அந்த நேரத்தில் அலோக் என்பவர்தான் நைட் டியூட்டி பார்த்து வந்தார். ஓடிவந்து போனை எடுத்த அலோக், "என்ன மேடம் வேணும்?" என்று கேட்டார். அதற்கு "ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கிட்டு உடனே வா" என்றார். அதற்கு அலோக், "இரவு நேரம் வேறு, டியூட்டியில் இருக்கிறேன், இப்போது போக முடியாது மேடம்" என்று சொல்லி இருக்கிறார்.

பளார் என அறைந்தார்

இதைக் கேட்டதும் போதையிலிருந்த அழகிக்கு கோபம் வந்துவிட்டது. கடகடவென ஆவேசத்துடன் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தார். அங்கே நின்றிருந்த அலோக்கின் கன்னத்தில் பளார் என ஒரு அறைவிட்டார். இதை கொஞ்சமும் அறையை வாங்கி கொண்ட அலோக், என்ன செய்வதென தெரியாமல் விழித்தார்.

போதையில் நின்ற அழகி

கன்னத்தில் அறைந்தும் ஆத்திரம் அடங்காத அழகி, போலீசுக்கு போன் போட்டார். உடனே போலீசாரும் இரவில் ஒரு பெண் போன் போடவும் என்னவோ பெரிய பிரச்சனை என்று நினைத்து கொண்டு விரைந்து வந்தார்கள். வந்து பார்த்தபிறகுதான் தெரிந்தது அழகி போதையில் நிற்ககூட முடியாமல் பேசி கொண்டிருந்ததை.

வர மாட்டேன்

இதை பார்த்ததும் போலீசார் பெண்ணை தங்களுடன ஸ்டேஷனுக்கு வருமாறு கூப்பிட்டார்கள். ஆனால் அழகியோ, "உங்களுடன் ஒரு பெண் போலீசும் இல்லை, இப்பவே மணி 3 ஆகிவிட்டது. உங்களுடன் வரமாட்டேன்" என்றுசொல்லி தகராறில் ஈடுபட்டார். போலீசார் எவ்வளவு வற்புறுத்தும் அவர்களுடன் செல்லாமல் தன் மாடியில் உள்ள தன் வீட்டுக்கு செல்ல முயன்றார். ஆனால் போலீசார் அவரை செல்ல அனுமதிக்கவில்லை. ஏற்கனவே கோபமும், போதையும் கலந்து கிடந்த அழகி, திடீரென தன் ஆடைகளை கழற்ற ஆரம்பித்தார்.

வழக்கு பதிவு

டிரஸ்களை கழட்ட தொடங்கியதும் போலீசாருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. போலீசார், மேலும் சில செக்யூரிட்டி கார்டுகள் முன்னிலையில் அரை குறை ஆடைகளுடன் நின்றுகொண்டே தகராறு செய்தார். அப்போது அங்கிருந்த உஸ்மான் என்ற இன்னொரு செக்யூரிட்டியையும் பளார் என அறைந்துவிட்டார். ஆனால் விடிந்ததும் அழகி நேராக போலீஸ் ஸ்டேஷன் போய் எல்லா செக்யூரிட்டிகள் மீதும் புகாரை அளித்துவிட்டு வந்தார். இதை பதிவு செய்து போலீசாரும் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.