பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து குண்டு வீசிய இந்திய ராணுவம்.. பரபரப்பு வீடியோ வெளியானது

டெல்லி: பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள அந்த நாட்டு நிர்வாக தலைமைஅலுவலகம் மீது இந்தியா குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

காஷ்மீரின் எல்லையோர பகுதிகளான பூஞ்ச் மற்றும் ஜலாலாவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருந்தது. இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள நிர்வாக தலைமையகத்தின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ ஏஎன்ஐ செய்தி ஏஜென்சியால் ஷேர் செய்யப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதை பாகிஸ்தான் மறுத்தது. ஆனால் அப்போது வீடியோ எதுவும் ஷேர் செய்யப்படவில்லை.

இப்போது நடந்த தாக்குதல் தொடர்பான வீடியோவில், இலக்கு குண்டு வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகுவதும், அங்கிருந்து புகை கிளம்புவதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதுவும் ஒரு வகையில் துல்லிய தாக்குதல் போலத்தான் நடந்துள்ளது என்றபோதிலும், அரசு தரப்பிலிருந்து இதுவரை இந்த தாக்குதல் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

 

ANI@ANI

: Pakistan army administrative HQ targeted along LoC near Poonch by Indian Army in retaliation to Pakistan’s mortar shelling of Poonch and Jhallas on October 23

5:03 PM - Oct 29, 2018

Twitter Ads info and privacy