ஜாவா கடலில் நொறுங்கிய விமானத்தை ஓட்டியவர் இந்தியர்.. முதல் விபத்தே கடைசி விபத்தாக மாறிய சோகம்!

ஜகார்த்தா: ஜாவா கடலில் நொறுங்கிய விமானத்தை ஓட்டியவர் இந்திய விமானி என்ற தகவல் கிடைத்துள்ளது. இவர் இதுவரை விபத்தை ஏற்படுத்தாத விமானி என்ற சாதனை படைத்தவர்.

லயன் ஏர் நிறுவனத்தின் ஜேடி 610 என்ற விமானம் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு இன்று காலை புறப்பட்டது. இதையடுத்து அந்த விமானத்தின் தொடர்பு 13 நிமிடங்களில் துண்டிக்கப்பட்டது.

189 பேர் நிலை .
கடலில் விழுந்தது .

200 பேர் பயணம் செய்யக் கூடிய இந்த விமானத்தில் மொத்தம் 189 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் ஜாவா கடற்கரையில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

 

விமானத்தின் பாகங்கள் 
எரிப்பொருள்

இதையடுத்து விமானத்தின் பாகங்கள் மற்றும் விமானத்தின் எரிப்பொருள் கடலில் மிதந்தது. இதையடுத்து விமானத்தில் இருந்த 189 பேரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

 

இந்திய விமானி 
மார்ச் மாதம்

இந்நிலையில் விமானத்தை இந்திய விமானிதான் இயக்கினார் என்பது தெரியவந்தது. டெல்லி மயூரா விகாரைச் சேர்ந்த பாவ்யே சுனேஜா (31) என்பவர் இந்த விமானத்தை இயக்கினார். இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் விமானியாக சேர்ந்தார்.

 

6000 மணி நேரம் 
அனுபவசாலி

இவர் 6000 மணி நேரத்துக்கு மேலாக விமானத்தை இயக்கியவர். இவர் இதுவரை விபத்தை ஏற்படுத்தாத விமானி என்ற சாதனையை பெற்றவர். இத்தனை அனுபவம் வாய்ந்த இவர் இயக்கிய விமானம் எப்படி விபத்தில் சிக்கியது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். எதுவாகினும் கருப்பு பெட்டி கிடைத்தால் மட்டுமே எதையும் சொல்ல முடியும் என அதிகாரிகள் கூறினர்.