100 வயது பாட்டியை சீரழித்த 20 வயது கொடூரன்! அதிர்ச்சி வாக்குமூலம்!! கேட்டு நடுங்கிப்போன காவல்துறை!

இந்தியாவில் 100 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 20 வயது இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கத்தின் நடியா மாவட்டத்தில் கிராமம் ஒன்று உள்ளது. அங்குள்ள ஒரு வீட்டில் 100 வயதான மூதாட்டி தனியாக தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது வீட்டுக்குள் அர்கா பிஸ்வாஸ் (20) என்ற இளைஞர் நுழைந்து மூதாட்டியை பலாத்காரம் செய்துள்ளார்.இதையடுத்து மூதாட்டி சத்தம் போட்ட நிலையில் அவர் படுத்திருந்த மெத்தைக்கு அடியில் அர்கா ஒளிந்து கொண்டார்.

பின்னர் அங்கு வந்த மூதாட்டியின் உறவினர்கள் அர்காவை பிடித்ததோடு பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அர்காவை கைது செய்தனர்.

பொலிசிடம் அர்கா அளித்துள்ள வாக்குமூலத்தில், சம்பவம் நடந்த போது நான் மது போதையில் இருந்தேன், நான் என்ன செய்தேன் என எனக்கே தெரியவில்லை என கூறியுள்ளார்.இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அர்கா 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.இதன்பின்னர் அவரிடம் மீண்டும் வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.