சபரிமலை வந்த பிஎஸ்என்எல் ஊழியர் ரெஹானவை தண்டித்த ஐயப்பன்

சபரிமலையில் சுவாமி ஐயப்பனை வழிபாடு செய்ய பெண்களுக்கு என்று தனிகட்டுப்பாடு மற்றும் ஆகம விதிகள் இருக்கின்றது. இந்நிலையில் உச்சநீதி மன்றம் அனைத்து வயது பெண்களும் ஐயப்பனை சென்று வழிபாடு நடத்தலாம் அண்மையில் என்று தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து, முதல் முறையாக வழிபாடு செய்த பெருமை கிடைக்கும் என்று ஆந்திராவை சேர்ந்த ரெஹானா பாத்திமா மற்றும் சேர்ந்த கவிதா என்ற இரு பெண்களும் இருமுடிகளுடன் சென்று சாமி தரிசனம் செய்ய முயன்றனர்.

பக்தர்களின் கடும் எதிர்ப்பால் பாதியிலேயே வீடு திரும்பினர். இந்நிலையில், வேற்று மதத்தை சேர்ந்த ரெஹானா பாத்திமாவுக்கு சுவாமி ஐயப்பன் தண்டைனை கொடுத்துள்ளார். இந்த விஷயம் தற்போது அனைத்து ஆன்மீக வாதிகள் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்படுகின்றது.

சபரிமலை வழிபாட்டு முறை:

சபரிமலையில் சுவாமி ஐயப்பனை தரிக்க வேண்டும் என்றால் இருமுடி கட்டி விரதமிருக்க வேண்டும். பெண்களாக இருக்கும் பட்சத்தில், பிறந்தது முதல் 8 வயது வரை செல்ல முடியும். மேலும் 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களும் தரிசனம் செய்ய முடியும். 
இது இந்துசமயத்தில் இது நடைமுறை வழக்கமாக இருக்கின்றது. இதை அனைத்து பெண்களும் கடைபிடித்து வருகின்றனர். மேலும், கோயிலுக்கு சுவாமி ஐய்யப்பன் பிரம்மசாரி அவதாரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். இதனால் கோயில் ஆகம விதிகளின்படி பூஜைகளும் வழிபாடு முறைகளும் இருக்கின்றது.

 

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு:

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த மாதம் 28-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஐப்பசி மாத பூஜைக் காக கோயில் நடை திறக்கும்போது பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு அறிவித்து அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தது.

 

ஐயப்ப பக்தர்கள் போராட்டம்:

தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள், பந்தளம் அரச குடும்பத்தினர், கோயில் தந்திரிகள், இந்து அமைப்புகள் மற்றும் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

தரிசனத்திற்கு சென்ற இரு பெண்கள்:

கடந்த வாரம் ஹைதராபாத்தைச் சேர்ந்த மோஜோ தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணியாற்றி வரும் பத்திரிகையாளர் கவிதாவும், பெண்ணியவாதி ரெஹானா பாத்திமா என்பவரும் சபரிமலை சன்னிதானத்தின் கீழ்ப்பகுதியான நடைப்பந்தலுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர். ஆனால், பக்தர்கள், தந்திரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவர்களைக் கீழே இறக்கக் கேரள அரசு உத்தரவிட்டது. இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

பணியிடை மாற்றம்:

இதையடுத்து, கொச்சி பனம்பள்ளி நகரில் உள்ள ரெஹானா பாத்திமாவின் வீட்டை சமூக செயற்பாட்டாளர்கள் தாக்கி சேதப்படுத்தினார்கள். இந்தச் சூழலில், ரெஹானா பாத்திமாவை பணியிடமாற்றம் செய்து பிஎஸ்என்எல் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

ஐயப்பனின் தண்டனை:

ரெஹானா பாத்திமா பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் கொச்சியில் உள்ள போட் ரெட்டி கிளையில் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணியாற்றி வந்தார். 
சபரிமலை விவகாரத்தில் தீவிரமாக ஈடுபட்டதைத் தொடர்ந்து அவரை பழரவிட்டம் நகரில் உள்ள கிளைக்கு இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


ஐயப்பனின் மேலும் ஒரு தண்டனை:

இதற்கிடையே பழரவிட்டோம் கிளையில் இருந்து ரெஹானா பாத்திமாவை வெளியேற்ற வேண்டும் எனக் கோரி நேற்று பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

முன்னதாக, சமூக செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமா சபரிமலையின் மாண்பையும், இந்துக்களின் உணர்வுகளையும் புண்படுத்தியதாகக் கூறி முஸ்லிம் சமூகத்தில் இருந்து கேரள முஸ்லிம் ஜமாத் நீக்கி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுவும் ஐயப்பனின் தண்டனையாகவே பார்க்கப்படுகின்றது. இந்த செய்தி பரபரப்பாக சேப்படுகின்றது.

 

பக்தர்கள், ஆன்மீக வாதிகள் கருத்து:

சபரிமலை வந்ததுக்கே சுவாமி ஐயப்பன் இரண்டு தண்டனைகள் கொடுத்துள்ளார். அவர் சன்னிதானத்திற்கு செல்ல விடமாட்டோம். அப்படியும் சென்றியிருந்தால், ஐய்யப்பன் மறக்க முடியாத தண்டனை கொடுத்து இருப்பார். ஐயப்பனிடம் வீம்புக்கு வால் பாய்ச்ச முடியாது. ஆனால் செய்த தவறையும் மனிக்கும் மனித மாண்பும் சுவாமி ஐயப்பனிடம் இருக்கின்றது. அருமையான அவதாரம் அவர்.

அதனால் தான் மாலையிட்ட பிறகும், அறிந்தும் அறியாமலும் செய்த குற்றங்களை மனித்து காத்தருள வேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றோம். 
செய்த தவறுக்காக ரெஹானா வேண்டிக் கொண்டால் அவரை ஐயப்பன் கட்டாயம் மனிப்பார் என்றும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

 

பிஎஸ்என்எல் அறிவிப்பு:

இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் அதிர வைக்கும் சலுகையை ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. இதில், ரூ.1699, ரூ. 2099 என்று ஆகிய இரண்டு சலுகைகள் இருகின்றன. இந்த இரண்டு சலுகைகளும் அறிவித்துள்ளதுக்கு வாடிக்கையாளர்கள் அனைவரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

 

ரூ.1699 பிளான்:

இந்த ரூ.1699 பிளானில் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவும், அன்லிடெடு கால்களும் லோக்கல், எஸ்டிடிகால்களும், 100 எஸ்எம்ஸ்களும் ஒரு ஆண்டுக்கு பெறமுடியும்.

 

ரூ. 2099:

மேலும் ரூ.2099 பிளானில் தினமும் 4 ஜிபி டேட்டாவும், 80 கேபிபிஎஸ் வேகத்தில் இணைய சேவையும், அளவில்லா லோக்கல், எஸ்டிடி கால்களும், தினமும் 100 எஸ்எம்எஸ்களும் பெற முடியும். மேலும், ஏராளமான பிளான்களும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்து வருகின்றது.

 

சலுகை விபரங்கள்:

இந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சலுகைகளை பெற அக்டோபர் 29ம் தேதி முதல் பெற முடியும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.