ஒரு மாமா செய்யும் வேலையா இது.. அதுக்கு இந்த ஊர் பெருசுகள் கொடுத்த தீர்ப்பு.. அதை விட கொடுமை!

ராஞ்சி: இன்னும் இந்த காப் பஞ்சாயத்துகள் சுப்ரீம் கோர்ட் ஆப்பு வைத்தும் அடங்காமல் உள்ளன. இதனால் இன்னமும் பல கொடூர நாட்டாமைகள் தீர்ப்புகள் என்ற பெயரில் அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தாய்மாமா 
13 வயது சிறுமி

ஜார்கண்ட்டில் சாய்பாஸா என்ற பகுதி உள்ளது. இங்கு மஞ்சரி எனும் கிராமத்தில்தான் மீண்டும் ஒரு கொடுமை நிகழ்ந்திருக்கிறது. இந்த கிராமத்தை சேர்ந்த 6-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை அவளின் சொந்த தாய் மாமாவே சீரழித்து உள்ளார். தாய் மாமாவுக்கு வயது 28. மாமா இப்படி பலாத்காரம் செய்ததால் சிறுமி கர்ப்பமாகிவிட்டாள்.

 

வெட்ட வெளிச்சம் .
நாட்டாமைகள் .

இந்த விவகாரம் வெட்ட வெளிச்சமானது. அதாவது அந்த ஊருக்கே தெரிந்துவிட்டது. உடனே ஊருக்குள் இருந்த எல்லா பெரிசுகளும் ஒன்று சேர்ந்தார்கள்... பஞ்சாயத்தை கூட்டினார்கள்... கிராம மக்களே திரண்டார்கள்... அந்த மக்கள் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட 13 வயது குழந்தையையும், மாமாவையும் நிற்க வைத்தார்கள். இப்போது நாட்டாமைகள் தீர்ப்பு அளிக்கிறார்கள்.

 

தீர்ப்பு 
எரித்து கொல்ல வேண்டும்

அது என்னவென்றால், "சிறுமியை கற்பழித்து விட்டதால் ஊரின் மரியாதை கெட்டுவிட்டது. கவுரவம் பாழாகிவிட்டது. ஊர் மானத்துக்கு களங்கம் வந்துவிட்டது. அதனால் 13 வயசு பெண்ணை கெடுத்த மாமாவையும், பாதிப்புக்கு உள்ளான சிறுமியையும் ஊருக்கு நடுவில் உயிரோடு எரித்து கொல்வதுதான். அப்படி உயிரோடு எரிக்காவிட்டாவில், 5 லட்சம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்" இதுதான் அந்த ஊர் பெரிசுகளின் தீர்ப்பு.

 

விசாரணை 
மாமா கைது

இந்த விஷயம் அந்த ஊர் போலீசாருக்கு தெரியவந்ததையடுத்து, விரைந்து வந்து மாமாவை முதலில் கைது செய்துவிட்டார்கள். பிறகு இப்படி ஒரு தீர்ப்பை வழங்கிய பஞ்சாயத்து தலைவர்களை எச்சரித்ததுடன், அவர்கள் மீதும் வழக்கை போட்டு விசாரித்து வருகின்றனர்.