தன்னை கற்பழித்ததாக பொய் புகார் - பெண்ணுக்கு 2 ஆண்டு ஜெயில்

எகிப்தில் பெண் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அளித்த புகார் பொய் என நிரூபமனமானதால் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
 
எகிப்தை சேர்ந்த பெண் ஒருவர் தான் பாலியல் பலாத்கார அவலத்திற்கு ஆளானேன் என பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தவே, போலீஸார் அந்த பெண்ணிற்கு ஏற்பட்ட அவலங்களை பற்றி விசாரித்தனர்.
 
விசாரணையின் முடிவில் அந்த பெண் வீண் விளம்பரத்திற்காக இந்த கீழ்த்தரமான நாடகத்தை நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது.