நடுரோட்டில் பெண்களின் பிணத்திற்கு பிரேத பரிசோதனை: அதிர்ச்சி தகவல்

ராஜஸ்தான் மாநிலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு பெண்களின் உடல்களை நடுரோட்டில் பிரேத பரிசோதனை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சமிபத்தில் மின்சாரம் தாக்கி 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இரண்டு பெண்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அந்த பெண்களின் உடல்களை மருத்துவமனைக்கு உள்ளே கொண்டு செல்லாமல் நடுரோட்டில் வைத்து ஒருசில நிமிடங்களில் இரண்டு பெண்களின் உடல்களுக்கு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். இதனை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்த மருத்துவமனைக்கு வந்த ஒருவர் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவு செய்தார். இந்த புகைப்படம் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதில் கூறிய அந்த பகுதியின் மாவட்ட கூடுதல் ஆட்சியர், செய்திகளில் வெளியானவற்றை அடிப்படையாக கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.