மந்திரவாதியை விட்டு மனைவியை பலாத்காரம் செய்ய வைத்த கணவன்

தருமபுரியில் நபர் ஒருவர் மந்திரவாதியை விட்டு தனது மனைவியையும் மகளையும் பலாத்காரம் செய்ய வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரியை சேர்ந்த மணி என்பவருக்கு திருமணமாகி 16 வயதில் ஒரு மகளும் 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

 

இந்த தம்பதியினருக்கிடையே பல வருடங்கள் வயது வித்தியாசம் இருப்பதால் அவர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை இருந்து வந்துள்ளது.

 

இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர் குடும்பத்தில் உள்ள பிரச்சனை தீர குட்டி மணி என்ற மந்திரவாதியை வீட்டிற்கு கூட்டி வந்திருக்கிறார். அந்த மந்திரவாதி அந்த பெண் மீது குட்டிச்சாத்தான் ஏவி விடுவதாக மிரட்டி அப்பெண்ணனை பலாத்காரம் செய்துள்ளார். 

 

இதனை அந்த பெண் கணவரிடம் தெரிவித்தபோது இந்த விஷயம் வெளியே தெரிந்தால் குடும்ப மானம் போய்விடும் என கூறியிருக்கிறார். இதே போல் அவரது 16 வயது பெண்ணும் மந்திரவாதியால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.

 

இதுகுறித்து அந்த பெண் கணவனிடம் கூறியபோதும் அவர் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் தன் கணவன் மணி மீதும் அந்த மந்திரவாதி மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மணியையும் மந்திரவாதியையும் தேடி வருகின்றனர்.