44 வருஷம் ஆச்சு 40 நாளில் ஒன்னும் குடிமுழுகாது மீண்டும் எச் ராஜா தெனாவட்டு பேச்சு

மதுரை: காவிரிக்காக 44 ஆண்டுகள் காத்திருந்த நிலையில் ஒரு 40 நாள் காத்திருப்பதில் ஒன்றும் குடி முழுகாது என்று பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்தார்.

காவிரி பிரச்சினை என்பது கர்நாடகா, தமிழகம், புதுவை, கேரளம் ஆகியவற்றுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை நிலவி வருகிறது. காவிரி நீரை ஒழுங்குப்படுத்த திட்டம் ஒன்றை 6 வாரங்களுக்கு செயல்படுத்துமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும் அந்த உத்தரவை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. மேலும் அந்த உத்தரவை அமல்படுத்த தீர்ப்பு வழங்கிய தேதியிலிருந்து 3 மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுதாக்கல் செய்துள்ளது.

போராட்டம் 
தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகள், அரசியல் கட்சிகள் என மறியல், தர்னா உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.

 

மக்கள் ஏமாற்றும் செயல் 
எச் ராஜா பேட்டி

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த எச் ராஜா கூறுகையில் தர்னா, மறியல், போராட்டம், மோடி ஹெலிகாப்டரில் வந்தா கீழே ஹெலிகாப்டர் மாதிரி பேசுறது, ஹெலிகாப்டர் பார்த்து கும்பிடறதுக்கு ஒரு கட்சி இருக்கு, ஹெலிகாப்டருக்கு கருப்பு கொடி காட்டுவதற்கு ஒரு கட்சி இருக்கு, ஆக இதெல்லாம் இவர்களை தமிழக மக்களை ஏமாற்றுவதற்கான செயல்களாகும்.


தகிடுதத்த அரசியல் 
40 நாளில் ஒன்றும் குடி முழுகாது

இவ்வளவு பாவங்கள் செய்துள்ளது மாநில கட்சிகள். திராவிட கட்சிகளின் தகிடுதத்த அரசியலை தமிழக மக்கள் கேட்க வேண்டாம். காவிரி விவகாரத்தில் 44 வருடங்கள் ஆகியிருக்கும் 40 நாட்களில் ஒன்னும் குடி முழுகாது.

 

40 நாட்கள் அவகாசம் 
முழு நியாயம்

40 நாட்கள் அவகாசம் கேட்டதற்கு கலவர பூமியாக்குவதா?. 40 நாட்கள் காத்திருப்பதில் என்ன தவறு இருக்கிறது. நிச்சயமாக தமிழகத்துக்கு முழு நியாயம் வழங்கப்படும் என்றார் எச்.ராஜா.

 

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ