தாயின் 100 வயது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 75 வயது மகளுக்கு நடந்த சோகம்

கர்நாடகாவில் தாயின் 100 வயது பிற்ந்தநாள் கொண்டாட்டத்தில் 75 வயது மகள் பலியாகியுள்ளார்.

இந்தியா கர்நாடகாவில் வசித்து வந்த கிளடிஸ் டி சூசா, இன்று தனது 100 ஆவது வயதை அடைந்துள்ளார். இதனால் இவரது 100 ஆவது வயது பிறந்தநாள் கொண்டாட்டத்தை கொண்டாடுவதற்காக, கனடாவில் வசிக்கும் இவரது 75 வயது மகளான கிளோறியா கர்நாடகாவுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் மிகவும் பிரமாண்ட ஏற்பாட்டில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில், கிளோறியா திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவரை அழைத்து சோதனை செய்ததில் கிளோறியா மரணமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில் கிளோறியா ஏற்கனவே உடல்நல குறைவுடன் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிளோறியாவின் உடல் தனி விமானம் மூலம் கனடாவிற்கு எடுத்து செல்லப்படவுள்ளது.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ