நான் என் கணவரோடு சென்று சின்னம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கி வருவேன் உருகும் சசிகலா புஷ்பா

தனது கணவருடன் சேர்ந்து சென்று பெங்களூரு சிறையில் இருக்கும் சென்று சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெறுவேன் என இரண்டாவதாக திருமணம் செய்துள்ள சசிகலா புஷ்பா எம்.பி கூறியுள்ளார்.

வழக்கறிஞர் ராமசாமிக்கும், ராஜ்யசபா, எம்.பி., சசிகலா புஷ்பாவுக்கும், டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில், பாரம்பரிய முறைப்படி, நேற்று மறுமணம் நடந்தது.பல்வேறு சர்ச்சைகளில் ஏற்கனவே அடிபட்டு வந்த, ராஜ்யசபா, எம்.பி., சசிகலா புஷ்பா, 41, தன் கணவரான, லிங்கேஸ்வர திலகனிடமிருந்து விவாகரத்து பெற்றார். சமீபத்தில், இந்த தகவலுடன் சேர்ந்து, மற்றொரு தகவலும் வெளியானது.

அதன்படி, டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர், ராமசாமியுடன், சசிகலா புஷ்பாவுக்கு திருமணம் நடக்கவுள்ளதாக அழைப்பிதழ் வெளியானது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மதுரையைச் சேர்ந்த பெண், ராமசாமிக்கும், தனக்கும் ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதாக புகார் அளித்தார்; மேலும், சசிகலா புஷ்பாவுக்கு நடக்கவிருந்த திருமணத்திற்கு, கோர்ட்டில் தடையும் வாங்கினார்.

 

 

இதனால், திட்டமிட்டபடி திருமணம் நடக்குமா என்ற சந்தேகம் நிலவியது. இந்நிலையில், நேற்று டில்லி பாரகம்பா சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், சசிகலா புஷ்பாவுக்கும், ராமசாமிக்கும் திருமணம் நடந்தது.

இதனையடுத்து, சசிகலா புஷ்பாவின் 2வது திருமணம் குறித்து பலரும் விமர்சனம் கூறி வந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா, நான் 41 வயதில் 2வது திருமணம் செய்து கொண்டதை சிலர் கேலி கிண்டல் செய்கின்றனர். அதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்படப் போவதில்லை.

நான் எப்போதுமே தைரியமானவள், நான் வாழ்வதற்கு இன்னும் நீண்ட காலம் இருக்கிறது. என்னுடைய எஞ்சிய வாழ்க்கையை வாழ்க்கையை நிம்மதியாகவும், நேர்மையாகவும் கழிக்க விரும்புகிறேன்.

 

 

சின்னம்மா சசிகலாவை நான் ஆரம்பத்தில் விமர்சித்தது உண்மைதான். ஆனால் அரசியலில் இவையெல்லாம் சகஜம் தானே. பன்னீர்செல்வம், நல்லவர் என்று நினைத்து முன்பு ஆதரித்தேன். ஆனால் அவர் பதவிக்காகத்தான் வாழ்கிறார்கள் என்பது இப்போது தான் புரிந்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரும் பதவிக்காக காலில் விழுந்து சசிகலாவுக்கே துரோகம் செய்தார்.

இவர்களுடன் ஒப்பிடுகையில் சின்னம்மா சசிகலா மிகவும் நல்லவர் அவர் சிறையில் கஷ்டப்படுகிறார். எங்கள் திருமணத்துக்காக சசிகலாவுக்கு பத்திரிகை வைக்க விரும்பினோம். ஆனால் எங்கள் திருமணத்தை சிலர் கிண்டல் கேலி செய்ததால் யாருக்கும் திருமண பத்திரிகையை கொடுக்கவில்லை. ஆனால் விரைவில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து நானும், எனது கணவரும் வாழ்த்து பெறுவோம் இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ