இது நடந்தால் கர்நாடகாவில் கண்டிப்பாக போராட்டம் வெடிக்கும் மிரட்டிய வாட்டாள் நாகராஜ்

பெங்களூரு: தமிழகத்திற்கு ஆதரவாக மத்திய அரசு  காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகாவில் பெரும் போராட்டம் வெடிக்கும் என கன்னட கூட்டமைப்புக்களின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார்.

 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும்,வணிகர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அவர்களை மட்டுமில்லாமல் அரசியல் கட்சியினரும் திரைத்துறையினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டமும் நடைபெறவுள்ளது.
ஆனால் கர்நாடகாவில் நடைபெறவிருக்கும் தேர்தலை மனத்தில் வைத்து மத்திய அரசு எந்தவித முடிவும் எடுக்காமல் இருக்கிறது.

      

இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறும் போராட்டம் குறித்து கன்னட கூட்டமைப்புகளின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது காவிரி விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் அரசியல் செய்கின்றன என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.மேலும் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக காவேரி மேலாண்மை அமைத்தால் கர்நாடகா போர்க்களமாக மாறும் என்றும்,மேலும் இதற்கு எதிராக ஏப்ரல் 5 ல் கர்நாடகாவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார். 

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ