மகாராஷ்டிராவில் இருந்து குமரிக்கடல் வரை நிக்குது.வெளுத்து வாங்குமா நனைத்துவிட்டு போகுமா

தமிழகத்தில் பல மாவட்டங்களில் நேற்று (வெள்ளிக்கிழமை) வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

காலையிலிருந்தே வெயிலின் தாக்கத்தை உணர முடிந்தது. இதன் காரணமாக, கரூர், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் 102 டிகிரி வெப்பநிலை பதிவானது.

திருநெல்வேலி, சேலம், சென்னை, தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 98 டிகிரி வெப்பநிலை பதிவானது.

இந்த நிலையில், தெற்கு மத்திய மகாராஷ்டிராவில் இருந்து குமரிக்கடல் வரை உள்தமிழகம் வழியாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைப் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி நேற்று வெளியிட்ட அறிவிப்பில்,

தெற்கு மத்திய மகாராஷ்டிராவில் இருந்து குமரிக்கடல் வரை உள்தமிழகம் வழியாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி நீடித்து வருகிறது.

இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைப் பெய்யும். சென்னையில் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ