பணிக்கு செல்லும் பெண்களுக்கே தான் இந்த சீக்ரெட் பழக்கம் அதிகமாம் வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்களிடம் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக  ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தினாலும் புகை பிடிக்கும் பழக்கம் அதிகரித்து கொண்டு தான் வருகிறது.

இதில் அதிர்ச்சி என்னவென்றால் ஆண்களை விட பெரும்பாலன பெண்களும் இப்பழக்கத்தில் சிக்கியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் புகைப்பழக்கத்தினால் சுமார் 9,32,600 இந்தியர்கள் பலியாகின்றனர். ஒரு வாரத்திற்கு 17,887 பேர் உயிரிழக்கிறார்கள் என்று அமெரிக்க புற்றுநோய் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கொல்கத்தா, சென்னை, டெல்லி போன்ற பெருநகரங்களில் வேலைக்கு செல்லும் பெண்களிடையே புகைப்பழக்கம் அதிகம் காணப்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

40 சதவிகித பெண்கள் புகைப்பழக்கம் உள்ளவர்களாகவும், 2 சதவிகிதம் பேர் புகைக்கு அடிமையானவர்களாகவும், 12 சதவிகித பெண்கள் ஒரு நாளைக்கு  2 அல்லது 3 சிகரெட் பிடிப்பவர்கள் என்று ஆய்வு கூறுகிறது.

இதற்கான காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்ததில் மன அழுத்தம், வேலைப்பளு போன்றவற்றால் புகைப்பழக்கத்தை மேற்கொண்டதாகவும் ஆய்வில் கலந்து கொண்ட பெண்கள் கூறியுள்ளனர்.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ