உடல் எடையை குறைச்சிட்டு கட்சி வெயிட்டை கூட்டுங்க ரேணுகா சவுத்ரிக்கு வெங்கய்யா நாயுடு அட்வைஸ்

வெங்கய்ய நாயுடு அட்வைஸ்

ரேணுகா சவுத்ரியின் இந்த பேச்சுக்கு பதிலளித்த வெங்கய்ய நாயுடு, உங்களுக்கு என்னுடைய எளிமையான ஆலோசனை இது தான். நீங்கள் உடல் எடையை குறைத்துக் கொண்டு கட்சியின் எடையைக் கூட்டுங்கள் என்றார்.

காங்கிரஸ் சிறப்பாக இருக்கிறது

வெங்கய்ய நாயுடுவுக்கு உடனடியாக பதிலடி கொடுத்த ரேணுகா சவுத்ரி காங்கிரஸ் கட்சி சிறப்பாகவே இருக்கிறது என்றார். காங்கிரஸ் எப்போதுமே தாழ்ந்து விடாது என்றும் குறிப்பிட்டார்.

மகளிர் இடஒதுக்கீடு

ரேணுகா சவுத்ரி, வெங்கய்ய நாயுடு உரையாடலால் ராஜ்யசபாவில் சிறிது நேரம் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து பேசிய ரேணுகா சவுத்ரி ராஜ்யசபாவில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் 11 சதவீதம் மட்டுமே இருக்கிறது. மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சூர்ப்பணகையுடன் ஒப்பிட்ட பிரதமர்

கடந்த பிப்ரவரி மாதம் ராஜ்யசபாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய போது ரேணுகா சவுத்ரி சத்தமாக சிரித்தார். இதற்கு ராஜ்யசபா தலைவர் வெங்கய்ய நாயுடு ஆட்சேபணை தெரிவித்த நிலையில், பிரதமர் குறுக்கிட்டு ராமாயணம் சீரியலுக்கு பிறகு, இத்தனை சப்தத்துடன் சிரிக்கும் பெண்ணை பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது என்றார்.

குடியரசு துணைத் தலைவர் இப்படி பேசலாமா

பிரதமர் மோடி ரேணுகா சவுத்ரியை ராமாயணத்தில் வரும் சூர்ப்பனகை கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு தான் இவ்வாறு பேசினார் என்று சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பறந்தது. ராஜ்யசபாவில் நகைச்சுவையாக நடந்த விவாதமாகவே இருந்தாலும் குடியரசு துணைத் தலைவர் ஒரு பெண்ணைப் பார்த்து உடல் எடை குறித்து இப்படி பேசியது அவருடைய பொறுப்பிற்கு அழகல்ல என்று சில எம்பிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ