நம்மால் பிழைக்கும் கர்நாடகா தமிழகத்தை பார்த்து திருந்தியது மலையேற்ற விவகாரத்தில் அவசர முடிவு

தேனியில் மலையேற்றத்தில் ஈடுபட்டவர்கள் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தனர். தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்காக சென்றவர்களில் 9 பேர் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

மலையேற்றப் பயிற்சிக்காக சென்றிருந்த 36 பேரில் உயிரிழந்த 9 பேர் தவிர மீதமுள்ள 27 பேரும் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேருக்கு எந்தக் காயமும் இல்லை என்பதால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ளவர்களுக்கு மதுரை மற்றும் தேனி மருத்துவக் கல்லூரிகளில் தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

அவர்களுக்கு தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும். அவர்கள் விரைவில் நலம் பெற விரும்புகிறேன்.

தீ விபத்து குறித்த தகவல்கள் கிடைத்தவுடன் மாவட்ட நிர்வாகமும், கமாண்டோ படையினர் உள்ளிட்ட மீட்புக் குழுவினரும் உடனடியாக களமிறங்கி சிறப்பாக செயல்பட்டனர்.

இந்நிலையில் மலையேற்றத்துக்கு கர்நாடகாவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது . மழைக்காலம் வரும் வரை மலையேற்றம் செய்ய தடைவிதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.