அண்டை நாடுகளே இந்தியாவிடம் கையேந்தும் தோண்ட தோண்ட புலனாகும் அதிசயம்

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர், பன்ஸ்வாரா பகுதியில்பூமிக்கு அடியில் 300 அடி ஆழத்தில் 11 கோடி டன் தங்கம்இருப்பதை புவியியல் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்

இதுகுறித்து ஜெய்ப்பூரில் இந்திய புவியியல் மையத்தின் இயக்குநர் என் குடும்பா ராவ் கூறியது பின்வருமாறு,

ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாரா, உதய்பூர் பகுதிகளில் பூமிக்கு அடியில் 300 அடி ஆழத்தில் தங்கம் இருப்பது எங்களுக்கு தெரிய வந்துள்ளது

கிட்டத்தட்ட 11.48 கோடி டன் எடை இருக்கும்.தற்போது நடந்துவரும் சுரங்கப் பணியில் செம்பு, தங்கம் ஆகியன அந்த பகுதிகளில் தொடர்ந்து கிடைத்து வருகிறது, 

மேலும், சிக்கர் மாவட்டத்தில்  இதுபோல் தங்கம், செம்பு உள்ளிட்ட உலோக தாதுக்கள் பூமிக்கடியில் பரவி கிடக்கிறது

அங்கும் அகழ்வாராய்வு, சுரங்கப்பணிகள் மற்றும் ஆராய்ச்சி  நடந்து வருகின்றன.

இது தவிர்த்து ஜெய்ப்பூரில் நடந்து வரும் ஆராய்ச்சி பணியில் தங்கம், செம்பு, ஈயம், துத்தநாகம் ஆகியவை கிடைக்கும் எனத் தெரிகிறது. 

தங்கம், செம்பு மற்றும் இன்றி ஈயம், துத்தநாகம் வணிக ரீதியில் பல துறைகளில் பயனுள்ளவை

ராஜ்பூரா, தரிபா சுரங்கத்தில் ஆய்வாளர்கள் கணிப்பின்படி,

35 லட்சம் டன் ஈயம், துத்தநாகம் பொதிந்து கிடைக்கிறது. மேலும், பில்வாரா பகுதியில் 8 கோடி டன் செம்பு இருப்பதையும் உறுதி செய்துள்ளோம். இவ்வாறு அந்த ஆய்வாளர்  தெரிவித்துள்ளார்.