இதுதான் இந்தியா வளர்ந்த லட்சணமா நாப்கினுக்காக குப்பை தொட்டியில் கை வைக்கும் சிறுமிகள்

சூரத் நகரின்  "பேட் கபுள்" என்று அழைக்கப்படுபவர்கள் மீனா மற்றும் அதுல் மேதா தம்பதியினர்.

கடந்த ஐந்து வருடங்களாக இவர்கள் செய்திருக்கும் செயலை யாராலும் செய்திருக்க முடியாது. மற்ற சமுதாயம் சார்ந்த மனிதர்களில் இருந்து இவர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள்

கடந்த 5 ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் 5000 சானிட்டரி நாப்கின்களை ஏழை எளிய பெண்களுக்கு வழங்கி வருகின்றார்கள் என்றால் நம்ப முடிகிறதா..?

அது தான் இவர்களுக்கு "பேட் கபுள்" என்ற பெயரை வாங்கி கொடுத்திருக்கிறது. சரி இந்த எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது என்று கேட்டதிற்கு,

இதற்கெல்லாம் காரணம் இரண்டு சிறுமிகள் தான். நான் ஒருமுறை எனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த பொழுது இரண்டு சிறுமிகள், என் வீட்டுக்கு அருகில் இருந்த குப்பை தொட்டியில் எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.

பிறகு அதிலிருந்து ஒன்றை எடுத்தனர். எனக்கு பார்த்த உடனே தூக்கி வாரிப்போட்டது. அவர்கள் இருவரும் எடுத்தது நாப்கினை.

சரி இதை எதற்கு எடுத்து செல்கிறீர்கள் என்று கேட்டதிற்கு, நாப்கின் வாங்கும் அளவிற்கு எல்லாம் வசதி இல்லை அதனால் குப்பையில் கிடக்கும் கிடக்கும் நாப்கினை எடுத்து சென்று தண்ணீரில் அலசி போட்டுக்கொள்வோம் என்று கூறினர். 

இதில் இருந்து தான் எனக்கும், என் கணவரும் ஒவ்வொரு மாதமும் அருகிலிருக்கும் குடிசைப் பகுதிகளுக்குச் சென்று, பெண்களுக்கு இலவசமாக நாப்கின் வழங்கிவருகிறோம் யோசனை தோன்றியது என்று கூறி இருக்கின்றனர்.