இதை பற்றி மட்டும் வாயை திறக்க பயப்படும் மோடி 3 ஆண்டுகளில் தலை கீழாக மாறிய நிலவரம்

கர்நாடக சட்டப்பேரவைக்கு அதி விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அங்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

அப்போது ராய்ச்சூர் எனும் இடத்தில் கூடியிருந்த பொதுமக்களின் முன்னிலையில் ராகுல்காந்தி பேசியதாவது:

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் சித்தராமையா நிறைவேற்றியுள்ளார். பொய்யான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி ஒரு போதும் கொடுத்தது கிடையாது. 

காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும். மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை முதல்வர் சித்தராமையா கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளார். மக்களின் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு பலமடங்காக அதிகரித்துள்ளது. மக்கள் மனதில் முதல்வர் சித்தராமையா இடம் பிடித்து விட்டார்.

இதனால் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தான் மக்கள் வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மாநில அரசின் மீது மக்களிடையே எவ்வித எதிர்ப்பு அலையும் இல்லை. ஊழல் குற்றச்சாட்டுகளும் கூட இல்லை. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது உறுதி.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தொடர்ந்து மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கு சென்று வந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை அருகில் வைத்து கொண்டு கர்நாடக காங்கிரஸ் அரசு ஊழலில் ஈடுபடுவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு கூறி வருகிறார். 

பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாவின் மகனின் சொத்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ரூ.50 ஆயிரமாக தான் இருந்தது. ஆனால் தற்போது அவருடைய சொத்து மதிப்பு ரூ.80 கோடியாக இருக்கிறது.

அமித்ஷாவின் மகன் சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு கூறியுள்ளது. ஆனால் அதுகுறித்து பிரதமர் மோடி பேச தயங்குவது ஏன்?. 

தேர்தலுக்கு முன்னதாக 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால் நமது நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. நம்முடைய நாட்டை விட சீனாவில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க, அந்த நாடு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.