:தமிழன் என்ற கன்னடர்களின் முகத்தில் கரியை பூசி இவனே தமிழன் என்று நிரூபித்த சம்பவம்

நேற்று காலை இராமேஸ்வரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சோழந்தூர் கிராமம் அருகே அதிவேகமாக வந்த கர்நாடாகாவை சேர்ந்த ஒரு கார் சாலையின் ஓரத்தில் வந்து கொண்டிருந்த ஓர் இருசக்கர வாகனத்தை இடித்து தள்ளிவிட்டு சாலையின் ஓரத்தை தாண்டி சென்று கவிழ்ந்து பெரும் விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

மக்கள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் விபத்துக்கு உள்ளான மகிழுந்தில் வந்தவர்களை காப்பாற்ற யாரும் இல்லாத நேரத்தில் அதே காரினால் இடித்து தள்ளப்பட்டதில் காயமடைந்த இருசக்கர வாகனத்தில் வந்தவரான ராசசிங்கமங்களம் மருதன்பச்சேரி கிராமத்தை சேர்ந்த சதீசுகுமார் என்கிற இளைஞர் தனது காயத்தை பொருட்படுத்தாது உடனடியாக ஓடிச்சென்று விபத்துக்குள்ளான காரின் கண்ணாடியை உடைத்து உள்ளேயிருந்த பெண்கள் உள்ளிட்டோரை காப்பாற்றி பிறகு பொதுமக்களின் உதவியோடு 108ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

தமிழக ஓட்டுனர்கள் கர்நாடகம் வழியே வேற்று மாநிலங்களுக்கு செல்லும் போது, காவிரி விவகாரம் தீவிரம் அடைந்த நேரத்தில், அடித்து நிர்வாணப்படுத்தி கொடுமை செய்தார்கள்.

ஆனால் என்ன துன்புறுத்தினாலும் தமிழனுக்குள் இருக்கும் மனிதாபிமானம் என்று ஒழிந்து போகாது என்பதற்கு இது போன்ற சில சம்பவங்களே சாட்சி.