ராணுவத்தை விட ஆர்எஸ்எஸ் 3 நாளில் போருக்கு தயாராகிவிடும் திறன்படைத்தது மோகன் பகவத்

பாட்னா: நாட்டிற்காக போரிட ராணுவத்தை விட 3 நாளில் போருக்குத் தயாராகிவிடும் திறன் படைத்தது ஆர்எஸ்எஸ் என்று அதன் தலைவர் மோகன் பகவத் தெரிவத்துள்ளார். மோகன் பகவத்தின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத். முசாஃபர்பூரில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், 'போருக்கு வீரர்களை தயார்படுத்த ராணுவத்திற்கு ஆறேழு மாதங்கள் தேவைப்படும் என்றும், ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பானது மூன்றே நாட்களில் போருக்கு ஆட்களை தயார் செய்யும். இதுவே எங்களின் திறமை' என்று கூறியுள்ளார்.

நாட்டிற்கு அச்சுறுத்தல் என்றதும் அதற்காக உடனடியாக களமிறங்க ஆர்எஸ்எஸ் தயாராக இருக்கிறது. சட்டமும், அரசியலமைப்பும் இடம் கொடுத்தால் அதனை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒழுக்கமான அமைப்பு 
தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம்

ஆர்எஸ்எஸ் என்பது ராணுவ அமைப்போ அல்லது மத்திய துணை ராணுவ அமைப்போ இல்லை. நாங்கள் குடும்ப அமைப்பு போல செயல்பட்டாலும் ராணுவம் போன்ற ஒழுங்குகளை பின்பற்றுகிறோம். ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் எப்போதும் நாட்டிற்காக தியாகம் செய்யத் தயாராக இருக்கின்றனர். ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சொந்த வாழ்க்கை, குடும்பம் மற்றும் சமூகப் பணியில் சிறப்பாக செயல்படுவதாகவும் மோகன் பகவத் பாராட்டினார்.

 

காங்கிரஸ் கண்டனம் 
ராணுவத்தை தரம் தாழ்த்துவதா?

ராணுவத்தை தரம் குறைத்து ஆர்எஸ்எஸ்ஸை பெருமைப்படுத்தும் விதமாக மோகன் பகவத் பேசியுள்ளதற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே மோகன் பகவத் பேச்சு திரித்து கூறப்படுவதாக ஆர்எஸ்எஸ் விளக்கம் அளித்துள்ளது.ஆர்எஸ்எஸ் விளக்கம் 
விளக்கமளித்த ஆர்எஸ்எஸ்

மோகன் பகவத் ராணுவத்தையும், ஆர்எஸ்எஸ்ஸையும் ஒப்பிடவில்லை, ஆர்எஸ்ஸ் மற்றும் பொதுமக்களத் தான் ஒப்பிட்டார் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. போர் என்று வந்தால் ராணுவம் அதற்கு ஏற்ப மக்களை தயார் படுத்த வேண்டும், அதற்கு 6 முதல் 7 மாதங்கள் ஆகலாம்.

மோகன் பகவத் சொன்னது இது தான் 
மோகன் பகவத் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை

ஆனால் ஆர்எஸ்எஸ் போர் என்று வந்தால் 3 மாதத்தில் தயாராகி விடும். அந்த அளவிற்கு ஒழுக்கத்தை கடைபிடிக்கிறது என்று தான் மோகன் பகவத் பேசியதாக அந்த விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.