படுக்கையில் படுத்த சில வினாடிகளில் எனக்குள் என்ன நடக்கும் தெரியுமா இரகசியத்தை கூறிய மோடி

கவலைகள் என்னிடம் இல்லாத காரணத்தினால் தான், எனக்கு நிம்மதியான உறக்கம் வருகிறது என்று பிரதமர் மோடி கூறி இருக்கிறார்.

தினம் தினம் நான் நிம்மதியாக எழுவதால் தான் அடுத்த நாளை உற்சாகத்துடன் வரவேற்க முடிகிறது என்றார்.

தற்போது அரபு நாடுகளுக்கு 2 நாட்கள் பயணமாக சென்றுள்ளார் பிரதமர் மோடி. அங்கிருந்து வெளியாகும் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அவர்,

நான் தினமும் 4 மணிநேரமோ 6 மணிநேரமே தான் தூங்குகிறேன். சிறிது நேரமே நான் தூங்கினாலும் நிறைவான ஒரு தூக்கத்தை அடைந்து விடுகிறேன்.

மோடி செய்திபுனல் க்கான பட முடிவு

படுக்கையில் படுத்த சிலவினாடிகளில் தூங்கிவிடுவேன். இதற்கு காரணம் என்னுள் எப்போதும் கவலைகளை வைத்துக்கொள்வதில்லை.

காலையில் எழுந்தால் போதும் யோகா செய்ய தொடங்கி விடுவேன். அதுவே என் புத்துணர்ச்சிக்கு காரணமாக அமைகிறது.

அதன் பின்பு தொலைதொடர்பு சாதனங்களில் வந்த தகவல்களை பார்ப்பேன். அதன் பின்னர் நான் அறிமுகப்படுத்திய திட்டங்கள் குறித்து நேர்மறையான மற்றும் எதிர்மறையான கருத்துகளை பார்ப்பேன்.

மோடி செய்திபுனல் க்கான பட முடிவு

இதெல்லாம் எனக்கும், மக்களுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துகிறது.

அடுத்த நாள் என்ன செய்யப்போகிறேன் என்று இரவு உறங்கச்செல்வதற்கு முன்னரே தயார் செய்துவிடுகிறேன்.

கடைசி கட்டத்தில் சோம்பல் கொள்வதை நான் ஒருபோதும் விரும்புவதில்லை. சாதாரண சைவ உணவை மட்டுமே உண்கிறேன்.

விடுமுறை என்ற பேச்சுக்கே என்னிடம் இடமில்லை. குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோதோ அல்லது தற்போது பிரதமராக இருக்கும் நிலையிலோ அதைப்பற்றி நான் யோசிக்கவே இல்லை" என்று கூறி இருக்கிறார்.

தொடர்புடைய படம்

மேலும், தொழில்நுட்ப உதவியுடனேயே, மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தமுடியும் என்பதை உறுதியாக நம்புகிறேன் என்று கூறி உள்ளார்.