சர்வதேச கிரிக்கெட்டே இனி ஒரு தமிழரின் கையில் உலக அரங்கில் மரண மாஸ் காட்டிய ஒரே தமிழச்சி

உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பான நிறுவனங்களில் ஒன்றான பெப்சியின் தலைவராகவும், அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் சென்னையை சேர்ந்த இந்திரா நூயி.

இவர் தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முதல் பெண் இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

போர்பஸ் பத்திரிகை அதன் 2008 ஆம் ஆண்டிற்கான உலகின் 100 மிக வலிமையான பெண்கள் பட்டியலில் நூயியை மூன்றாவது நபராக மதிப்பிட்டது.

பார்ச்சுன் பத்திரிகை அதன் 2006, 2007, 2008 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளுக்கான வணிகத்தில் மிகவும் வலிமையான பெண்கள் மதிப்பீட்டில் நூயியை முதலிடத்தில் வைத்திருந்தது.

2008 ஆம் ஆண்டு, நூயியின் பெயரை அமெரிக்காவின் சிறந்த தலைவர்களில் ஒருவராக யுஎஸ் நியூஸ் & வேர்ல்டு ரிப்போர்ட் வெளியிட்டது என்பது இவரின் வாழ்கையில் அடைந்த உச்சகட்ட மைல்கல்.

அதே ஆண்டில் அமெரிக்க-இந்திய வணிகக் கவுன்சில் (USIBC) தலைவராக நூயி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலாபநோக்கற்ற வணிக ஆலோசனை அமைப்பான இது, இந்தியாவில் வணிகம் செய்யும் உலகின் 300க்கும் மேற்பட்ட மிகப்பெரிய நிறுவனங்களைக் குறிக்கின்றது.

அதையெல்லாம் தாண்டி தற்போது உலக கிரிக்கெட் அரங்கமே வியப்படையும் ஒரு பதவியை அடைந்து இருக்கிறார்.

ஐ.சி.சியின் இயக்குனரை தேர்வு செய்வதற்கான வாரியக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திரா நூயியை இயக்குனராகத் தேர்வு செய்வது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

வருகின்ற ஜூன் மாதம் பொறுப்பேற்க இருக்கிறார். அவருடைய பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் என்று கூறப்படுகிறது.

அதன்பிறகு மேலும் 2 முறை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க முடியும். அந்தவகையில் அவர் மொத்தம் 6 ஆண்டுகாலம் பதவி வகிக்கலாம்.

ஐ.சி.சியின் இயக்குனராக பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டிருப்பது பெருமைக்குரிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.