மொத்தமாக தூக்கிவிட்டால் மக்கள் கேள்வி கேட்பார்கள் இப்படி செய்தால் நடப்பது தெரியாமல் இருக்கும்

ஆரம்பத்தில் மக்களை நம்ப வைக்க மானியம் என்றெல்லாம் கூறுவார்கள், ஆசைப்பட்டு தலையை ஆட்டினால் அவ்வளவுதான்..!

உலக பொதுவர்த்தக கழகத்தில் ரேசன் கடைகளை மூடுவதற்கான ஓப்பந்தத்தில் பாஜகவின் நிர்மலா சீதாராமன் கையெழுத்து போட்டதற்கு பின் படிப்படியாக ரேசன் கடைகளை  இழுத்து மூடுவதற்கான வேலையை மத்திய பிஜேபி அரசு செய்ய ஆரம்பித்திருக்கிறதென்று ஏற்கனவே மே 17இயக்கம் ஆதாரத்தோடு கூறிஇருந்தது

ஆனாலும் அரசாங்கம் தொடர்ந்து ரேசன்கடைகளை இழுத்து மூடும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளது

அதன்படி ’உணவு பாதுகாப்பு மசோதா’ என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி மாநிலங்களுக்கு ரேசனில் ஒதுக்கும் உணவு பொருட்களை பெருமளவு குறைத்து விட்டது.

அதேபோல புதிய புதிய அறிவிப்புகளை டி.வி வைத்திருப்போர், பைக் வைத்திருப்போர், ஏ.சி வைத்திருப்போர் போன்ற பலவேறு காரணங்களை சொல்லி ரேசன்கார்டு கிடையாதென்று அறிவித்து ரேசனில் பொருள் வாங்குபவர்களின் எண்ணிக்கையை குறைத்தது.

அடுத்து ரேசனில் விற்கும் பொருட்களான சர்க்கரை மண்ணெண்யை போன்ற பொருட்களுக்கு மத்திய அரசின் மானியத்தை முற்றிலுமாக நிறுத்தியது.

இதற்கும் மேலும் ரேசன் கடைகளில் பொருள் வாங்குபவர்களை குறைக்கத்தான் தற்போது ஒரு புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதாவது

வருகிற ஏப்ரல் மாதம் முதல் ரேசன் கார்டு வைத்திருப்பவர்கள் ரேசனில் தங்களுக்கு கிடைக்கவேண்டிய(ஒதுக்கப்பட்டிருக்கிற அளவான) அரசி, கோதுமை போன்ற போருட்களை ரேசன் கடைகள் தவிர்த்து இந்தியாவிலுள்ள எந்த மாநிலத்திலுள்ள வெளிகடைகளிலும் வாங்கிக்கொள்ளலாமென்பது தான் இந்த திட்டம்.

இந்ததிட்டத்திற்காகத்தான் அனைத்து மாநிலங்களும் விரைவாக ரேசன் கார்டு வைத்திருப்பவர்கள் ஸ்மார்ட்கார்டு திட்டத்திற்குள் கொண்டுவந்தார்கள்.

இதன்படி வெளிகடைகளில் வாங்கலாமென்றால் பின்னர் ரேசன் கடைகளின் தேவை என்ன இருக்கிறது.

எளிதாக ரேசன் கடைகளை மூடுவதற்குத்தான் இந்த திட்டம் வழிவகுக்கும். 
ஏற்கனவே பல மாநிலங்களில் ரேசனில் பொருட்கள் கொடுப்பதற்கு பதிலாக பணமாக கொடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதனால் ஏற்கனவே ரேசன் கடைகளின் தேவை வெகுவாக குறைந்துவிட்டது. இப்போது வெளிகடைகளில் வாங்கிக்கொள்ளலாமென்றால் ரேசன் கடையே இனி இருக்காது என்பதுதான் நிதர்சனம்