நாட்டிற்கே அவமானம் நீதித்துறையை காறித்துப்பிய நீதிபதிகள் கேள்விக்கணையால் வறுத்தெடுத்த நிருபர்

டெல்லி : சீரழிந்து வரும் உச்சநீதிமன்ற நிர்வாகம் குறித்தும், தலைமை நீதிபதி மிஸ்ரா குறித்தும் பல்வேறு விமர்சன கருத்துக்களை அளிக்க முயன்ற நீதிபதிகளை செய்தியாளர்கள் கேள்விக்கணையால் கிரங்கடிக்கச் செய்தனர். 

உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். இந்திய நீதித்துறை வரலாற்றில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களை சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

சரியாக இன்று நண்பகல் 12.15 மணியளவில் தில்லியில் உள்ள உச்ச நீதிமன்ற வளாகத்தில் மூத்த நீதிபதிகள் நான்கு பேர் செய்தியாளர்களை சந்தித்தனர்.இதில்,நூற்றுக்கணக்கான செய்தியாளர்களும், டிவி சேனல் பத்திரிக்கையாளர்களும் கலந்துகொண்டனர்.

நீதித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இது இப்படியே தொடர்ந்தால்  நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது.   

செய்தியாளர்களிடம் பேசிய மூத்த நீதிபதி செல்லமேஸ்வர்
கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் உச்ச நீதிமன்ற நிர்வாகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. நீதித்துறையை சரிசெய்யாவிட்டால் நாட்டில் ஜனநாயகம் சீர்கெட்டுவிடும்.இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் தான் செய்தியாளர்களைச் சந்திப்பதாக நீதிபதிகள் கூறினர். 

அவர்கள்,என்ன பிரச்சனை என்று நேரடியாக கூறாமல் பொத்தாம் பொதுவாக நிர்வாகம் சரியில்லை என்ற வார்த்தையையே கூறிக்கொண்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து அங்கு சூழ்ந்திருந்த செய்தியாளர்கள், என்ன பிரச்சனை, என்ன செய்தது நிர்வாகம், யாரிடம் இதற்குமுன் புகார் அளித்தீர்கள், அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றனர்.

இதனால்,பதிலளிக்க முடியாமல் திணறிய நீதிபதிகள் உங்களுக்கு அந்த கடிதத்தின் நகலை தருகிறோம், பொறுங்கள்... பொறுங்கள்... என்று கூறினர். இருந்தும் அவர்களை விடாத செய்தியாளர்கள், தலைமை நீதிபதி மீது உங்களுக்கு அதிருப்தி இருக்கிறதா என்றவுடன் இதற்கு ஆமோதிப்பதைப் போல நீதிபதிகள் தலையசைத்தனர்.மேலும், வழக்குகள் ஒதுக்குவதில் அவர் பாராபட்சமாக நடந்துக்கொள்வதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து கேள்விமேல் கேள்வியாக செய்தியாளர்கள் அடுக்கிக்கொண்டே சென்றதால்,பதிலளிக்க முடியாமல் தவித்த நீதிபதிகள்,கடிதத்தின் நகலை கொடுத்து விட்டு செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக்கொண்டனர்.

நாட்டின் சக்தி மிக்க பதவியில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள், செய்தியாளர்களை நேரடியாக எதிர்க்கொள்வது என்பது அவர்களின் வாழ்க்கையில் மிக மிக அரிதான விஷயமாக கருதப்படுகிறது. இன்னும் கேட்டால் நடக்காத ஒன்றாகவே கருதப்படுகிறது.

தெற்கு பார்த்த வீட்டை ஒதுக்குவது உண்மையிலேயே சரிதானா?