இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையருக்கு வந்த சோதனை தற்போது அவருடைய நிலை

இந்தியாவின் தேர்தல் முறையில் மறுமலர்ச்சி செய்தவராக கருதப்படும் முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் தற்போது சென்னையிலுள்ள ஒரு முதியோர் இல்லத்தில் உள்ளார்.

இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தவர் தான் டி.என்.சேஷன். 

இவர் தேர்தல் ஆணையராக இருந்தகாலத்தில், பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இவரது சிறப்பான பணிக்காக இவருக்கு ராமன் மேக்சைசே விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அவருக்கும் அவரது மனைவிக்கும் குழந்தை இல்லாத காரணத்தினால், ஓய்விற்கு பிறகு தற்போது சேஷன் தன்னுடைய மனைவியுடன் சென்னையிலுள்ள 
ஒரு முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வருகிறார்.

கேரளாவிலுள்ள பாலக்காட்டில் அவர்களுக்கென்று வீடு இருக்கும்போதும் கூட, அவர்கள் முதியோர் இல்லத்தில் வாழ்வதையே விரும்புகின்றனர். 

மேலும் அவர்கள், தங்களது பணத்தில் அங்குள்ள மற்ற முதியவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குலேபகாவலி திரைப்பட விமர்சனம்