அரசு பள்ளிகளை தேடி ஓடும் எம்.எல்.ஏக்கள் ஒரே திட்டத்தால் நாட்டையே திரும்பி பார்க்க வச்சுட்டாரே

எம்.எல்.ஏமற்றும் அமைச்சர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசுப்பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என்பதற்கு, வகை செய்யும் சட்டத்தை கொண்டுவர ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவெடுத்துள்ளார்

தனியார் பள்ளிகள் ஆரம்பித்ததில் இருந்து, அரசு பள்ளிகள் ஏழை குழந்தைகளுக்கான பள்ளிகள் என்ற கூற்று உருவானது

அப்படி உருவாக காரணம் , அரசு பள்ளிகளின் தரம், தனியார் பள்ளிகளுக்கு நிகராக இல்லை...

அதனால் பணக்காரர்களும், அரசியல்வாதிகளும் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளுக்கு அனுப்ப மறுத்தனர்..தனியாரை தேடி ஓடினர்

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு, போதுமான மாணவர்கள் எண்ணிக்கை இல்லாததால், சும்மாவே இருந்த 9000 அரசு ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகள் மூடப்பட்டுள்ளது..

இந்த நிலையில், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களின் குழந்தைகள் கட்டாயமாக அரசு பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என்ற புதிய சட்டத்தை கொண்டு வர ஆந்திர அரசு முற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர்களின் கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியது,

அரசு பள்ளிகளின் விவகாரம், குறித்து சட்ட முன்வரைவு தயாரிக்குமாறு சம்மந்தப்பட்ட அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்..

இந்த புரட்சிகரமான செயலை செய்வதற்கு  முன்னர் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும்..

ஆந்திராவில் நாளுக்கு நாள் முன்னேற்ற வாழ்வாதார திட்டங்கள் நடைமுறை படுத்துவது, நாடே  உற்றுநோக்க தக்கது..

களைகட்டிய தமிழர் திருநாள் காரைக்குடி பள்ளியில் பொங்கல் வைத்த வெளிநாட்டினர்