கலர் கலரா நோட்டு வரும் போதே தெரிஞ்சுது கலர் பிரிண்ட் போடுவாங்கன்னு இப்படி சம்பாரிப்பாங்கனு

இந்தியாவுக்குள் வரும் கள்ள ரூபாய் நோட்டுகளில் 90 சதவீதம், மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ள பைஸ்னாப், காலியாச் ஆகிய இடங்களில் இருந்துதான் வருகின்றன.

இந்த இரு இடங்களும் வங்கதேசத்தின் எல்லைப் பகுதிகளில் இருப்பதால் அந்த நாட்டை சேர்ந்த ஏஜென்டுகள் எளிதாக ஊருக்குள் நுழைந்து கள்ள ரூபாய் நோட்டுகளை சப்ளை செய்கின்றனர்.

அப்பகுதி மக்களின் ஏழ்மை நிலையை பயன்படுத்தி, அவர் களுக்கு வேலை கொடுப்பதாகக் கூறி, ரூபாய் நோட்டுகளை கொடுக்கின்றனர்.

இவற்றை மொத்தமாக வாங்கி விநியோகம் செய்து நல்ல நோட்டுகளாக மாற்றி, அவற்றை திருப்பி கொடுப்பதற்கு நிறைய ஏஜென்டுகளும் அங்கு இருக்கின்றனர்.

ரூ.100 கள்ள நோட்டுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை திருப்பிக் கொடுத்தால் போதும். குடிசைத் தொழில் போல, பல வீடுகளில் இந்த தொழிலை செய்கின்றனர்.

இதனால் அவர்களை கண்டுபிடிப் பது மிகவும் கடினம்.சிங்கப்பூர், மலேசியாவில் கள்ளநோட்டு தொழில்நுட்பம்வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குள் கள்ள நோட்டுகள் கொண்டுவரப்பட்டாலும், உண்மையில் இந்த வேலைகள் அனைத்தையும் செய்வது பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தான்.

துபாய் மற்றும் ஹாலந்து நாடுகளில் கள்ள நோட்டுகளை அச்சடித்து, அங்கிருந்து விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு கொண்டு சென்று, பின்னர் வங்க தேசம் வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வருகின்றனர்.

இதற்கான தொழில்நுட்பங்களை மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் இருந்து வரவழைத்து அச்சடிக்கின்றனர். வங்கதேசம் வழியாக கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படும்போது, நேபாளம் வழியாக கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுகின்றனர்.

இந்தநிலையில், ரூபாய் 2,000, ரூ 200 மற்றும் 50 ரூபாய் இந்திய  ரூபாய்   கள்ள நோட்டுகள்  வங்காளதேசத்தில் அச்சிடப்படுவதாகவும் . அது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்திலும்  மற்றும்  வாட்சப்பிலும்  வெளியாகியுள்ளது. 

அதில் ஒருவர் இந்திய ரூபாய் 2,000, ரூ 200 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை  அடுக்கி வைக்கிறார்.

ஆனால் இது கள்ள நோட்டு தொழிற்சாலையா அல்லது   குழந்தைகள் விளையாடும் நோட்டுகள் அச்சிடப்படுகிறதா   என உறுதி செய்யமுடியவில்லை.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ரூ, 500, ரூ.200. ரூ.50 புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன.

இது போல் கள்ள நோட்டுகள் வங்காளதேசத்தில் அச்சிடபட்டன. வங்காள தேசத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் இந்திய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படும்  ஒரு தொழிற்சாலை கண்டறியப்பட்டது.

அங்கு இருந்த 2 பேர் கைது செய்யபட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு மில்லியன் இந்திய ரூபாய் நோட்டுகள் கைபற்றப்பட்டன.

மேலும் அவர்களிடம் இருந்து  ரூபாய் நோட்டுகள் அச்சிட பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ரூபாய் நோட்டு என்று ரிசர்வ் வங்கி தான் சொல்லி கொள்கிறது. அதில் என்ன பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன என்று மக்களிடம் சொன்னால் தானே கள்ள நோட்டு நல்ல நோட்டு வித்தியாசங்களை ஒப்பிட்டு பார்க்க முடியும்.

ரூபாய் நோட்டுகள் அறிமுகம் பற்றிய தகவல் தான் வெளிவருகிறதே தவிர அதில் உள்ள அம்சங்கள் பற்றிய விழிப்புணர்வு நடக்கிறது என்று ஒரு தகவலாவது வெளியாகி காதில் கேட்டிருப்போமா..?

இன்னும் அரசு விழித்துகொள்ளாமல் இருந்தால் அடுத்த பொருளாதார வழிகோலும் ஒன்றாக கள்ள நோட்டு பொருளாதாரம் மாறி விடும்.

நவீன தொழில்நுட்பம், மேம்பட்ட வடிவமைப்பு என்று சொன்னதை சர்வ சாதரணமாக ஒரு குடோனில் உருவாக்கும் காட்சியை பாருங்கள்:

300 ஆண்டுகளுக்கு பின் நடக்க போகும் விபரீதம் வெடித்தால் சுனாமி ஏற்படும் கணிக்க முடியாத சூழலில்