கோஹ்லி அவுட் ஆனதால் தீக்குளித்தேன் கிரிக்கெட் பார்த்துவிட்டு தீக்குளித்த 65 வயது நபர் வாக்குமூலம்

போபால்: இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டி கேப்டவுனில் இருக்கும் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. கோஹ்லி தொடங்கி எல்லோரும் வேகமாக அவுட் ஆகி நடையை கட்டினார்கள்.

இந்த நிலையில் இந்த போட்டியை பார்த்துவிட்டு மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாபுலால் பைரவா என்ற 65 வயது நபர் தீ குளித்து இருக்கிறார். இவர் கோஹ்லி அவுட் ஆன வருத்தத்தில் தீ குளித்து உள்ளார்.

கோஹ்லி மோசம் 
கோஹ்லி

இந்த போட்டியில் கோஹ்லியின் ஆட்டம் படுமோசமாக இருந்தது. இந்திய மண்ணில் செஞ்சுரிகளும், டபுள் செஞ்சுரிகளும் அடித்த கோஹ்லி இந்த போட்டியில் வெறும் ஐந்து ரன்னில் மோர்னி மோர்கல் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால் பலரும் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

தீ குளித்தார் 
தீ

இந்த போட்டியை பார்த்துக் கொண்டு இருந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாபுலால் பைரவா என்ற 65 வயது நபர் தீ குளித்து இருக்கிறார். கோஹ்லி அவுட் ஆன சோகம் தாங்க முடியாமல் அப்படி செய்துள்ளார். இவர் பெட்ரோல் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

 

மருத்துவமனையில் அனுமதி 
அவசர சிகிச்சை

இந்த நிலையில் இவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இவர் உடல் முழுக்க காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது. ஆனாலும் சிறிய அளவு காயங்கள் மட்டுமே ஏற்பட்டது. தற்போது இவர் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.


வாக்குமூலம் 
பேசினார்

இதுகுறித்து விசாரித்த போலீசிடம் பாபுலால் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் ''நான் கிரிக்கெட் பார்த்து கொண்டு இருந்தேன். வீட்டில் யாரும் இல்லை. கோஹ்லி அவுட் ஆனதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதான் தீ குளித்தேன்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

 

கொல்லங்குடி கருப்பாயி பாட்டியின் தற்போதைய நிலை கண் கலங்க வைக்கும் சோக பின்னணி