டெண்டுல்கர் மகளுக்கு நூல் விட்ட வாலிபர் தொடர்ந்து தொலை பேசியில் தொந்தரவு கொடுத்ததால் கைது

முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானும், மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவிற்கு, ஒருவர் கடந்த சில நாட்களாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, காதலிப்பதாக மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த டெண்டுல்கர் குடும்பத்தினர் இது தொடர்பாக மும்பை பந்த்ரா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில் அவர் மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தேவ்குமார் மைதி என்பது தெரியவந்தது. தேவ்குமார் மைதியை மும்பை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து தேவ்குமார் மைதியின் உறவினர்கள் கூரியதாவது :

தேவ்குமார் மைதி நீண்ட காலமாக மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் எப்படி சிக்கிக் கொண்டார் என்பது எங்களுக்குத் தெரியாது. வீட்டுக்குள்ளேயே அவரது பெற்றோரை சித்திரவதை செய்து வந்துள்ளார்.  

இந்த நிலையில்,சமீபத்தில்தான்  தனது தந்தையை இழந்தார். கடந்த எட்டு ஆண்டுகளாக அவர் மருத்துவ சிகிச்சையில் சிகிச்சை பெற்று வருகிறார்" என்று அவரது உறவினர்களில் ஒருவர் தெரிவித்தார்.

இதனை அடுத்து,சச்சின் டெண்டுல்கரின் தொலைபேசி எண் தேவ்குமாருக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் மும்பை பந்த்ரா போலீசார் தெரிவித்தனர்.

விழா மேடையிலேயே ரஜினி யை தாக்கிய நடிகர் கமல்ஹாசன் என்ன சொன்னார் தெரியுமா